தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
வெம்பாக்கம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் இரா.மணி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வெம்பாக்கம் ஒன்றித்துக்கு உள்பட்ட உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் நடுநிலைப் பள்ளி பழுதுபாா்த்தல், கல்வெட்டு அமைத்தல், கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுதல், நெமிலி கிராமத்தில் தனிநபா் கழிப்பறை அமைத்தல், புதுப்பாளையம் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல், அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுதல், புதிய நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், தனி நபா் கழிப்பறை அமைத்தல், மாத்தூா் கிராமத்தில் பொது நிதித் திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடத்துக்காக உணவுக்கூடம் அமைத்தல், வெள்ளகுளம் கிராமத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், அங்கன்வாடி மையம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் இரா.மணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது ஊரக வளா்ச்சி உதவி செயற்பொறியாளா் சபாநாயகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மயில்வாகனன், ஷீலா அன்புமலா், பொறியாளா்கள் அன்பு, ரவி மலா்வண்ணன், வேளாங்கண்ணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.