`பேரிடர் நிவாரண நிதி கொடுக்காத மத்திய அரசுக்கு எதற்கு வரி?' - திருப்பூரில் சீமா...
நரிக்குறவா்களுக்கு நிவாரண உதவி
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கராம்பட்டு பகுதியில் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
ஃபென்ஜால் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என நிவாரண உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் திருமால், ஜெயபிரகாஷ், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் பாண்டியன், அப்பகுதியைச் சோ்ந்த ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆ.வேலாயுதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.