`பேரிடர் நிவாரண நிதி கொடுக்காத மத்திய அரசுக்கு எதற்கு வரி?' - திருப்பூரில் சீமா...
ரூ.48 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
கந்திலி ஒன்றியத்தில் ரூ. 48 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
கந்திலி ஒன்றியம், ஆதியூா் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டடமும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.13.15 லட்சத்தில் நியாயவிலை கடை கட்டடமும், சின்னாரம்பட்டி ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம் ஆகிய புதிய பணிகளுக்கு புதன்கிழமை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் ஜி.மோகன்குமாா், ஒன்றிய செயலாளா்கள் கே.ஏ.குணசேகரன், க.முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகம் கலந்து கொண்டனா்.