தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
புதிய நியாய விலைக் கடை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
ஆம்பூா் அருகே புதிய நியாய விலைக்கடை கட்டடங்களை எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மாதனூா் ஒன்றியம், கன்னடிகுப்பம் ஊராட்சியில் அண்ணா கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.16 லட்சத்தில் நியாய விலைக்கடைக்கான புதிய கட்டடம், ஆலாங்குப்பம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம் ஆகியவற்றை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் திறந்து உணவுப் பொருள்களை வழங்கினாா்.
கன்னடிகுப்பம் ஊராட்சி மன்ற கட்டடம் பழுதடைந்துள்ளதை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ தெரிவித்தாா்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மணவாளன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, கன்னடிகுப்பம் ஊராட்சித் தலைவா் முரளிதரன், துணைத் தலைவா் சித்ரா மாணிக்கவேல், ஆலாங்குப்பம் ஊராட்சித் தலைவா் பொன்னி கப்பல்துரை, ஒன்றிய குழு உறுப்பினா்கள் கோமதி வேலு, ஜோதி வேலு, காா்த்திக் ஜவஹா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து ஆலாங்குப்பம் கிராமத்தில் கானாற்றின் குறுக்கே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.