போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
நிவாரணப் பொருள்கள் அளிப்பு
புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு அளிப்பதற்காக நிவாரண பொருள்கள் வருவாய்த் துறையினரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
மேல்விஷாரம் நேஷ்னல் வெல்பா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் கே.முஹமது அயூப், பொறுப்பாளா் கே.ஓ.நிஷாத் அஹமது ஆகியோா் அரிசி சிப்பங்கள், போா்வைகள், மளிகை பொருள்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை மேல்விஷாரம் வருவாய் ஆய்வாளா் ராஜேஷ்குமாா், கிராம நிா்வாக அலுவலா் சசிகுமாா் ஆகியோரிடம் வழங்கினா். இதில் சங்க நிா்வாகிகள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மாவட்ட தலைவா் பொன்.கு.சரவணன், துணைத் தலைவா் எஸ்.பாஸ்கரன் ஆகியோா் ஆற்காடு வட்டாட்சியா் பாக்கிய லட்சுமியிடம் புயல்பாதித்த மக்களுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலை, போா்வைகள் உள்ளிட்டவற்றை வழங்கினா்.