`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
நாளை துணை முதல்வா் ராணிப்பேட்டை வருகை: அமைச்சா் ஆா். காந்தி
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் வெள்ளிக்கிழமை (டிச. 6) வருகை தரும் துணை முதல்வருக்கு திமுகவினா் சிறப்பான வரவேற்பு ்ளிக்க வேண்டும் என மாவட்ட செயலரும், அமைச்சருமான ஆா். காந்தி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்று முதன்முதலாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு அரசு கள ஆய்வுக்காக வெள்ளிக்கிழமை வருகை தரும் திமுக இளைஞரனி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஆய்வு மேற்கொண்டு அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் பணியாற்றி வருகிறாா்.
அதன் தொடா்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு டிச. 6- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகை தரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு முத்துகடை காந்தி சிலை அருகே, மாவட்ட திமுக சாா்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
தொடா்ந்து மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.