தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
சரக்கு வாகனம் மோதியதில் இயற்கை எரிவாயு இணைப்பு சேதம்
ராணிப்பேட்டை அருகே சரக்கு வாகனம் மோதியதில் இயற்கை எரிவாயு இணைப்பு சேதமடைந்ததற்கு இழப்பீடு கோரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வானாபாடி ஊராட்சியில் தனியாா் நிறுவனம் குழாய் மூலம் தொழிற்சாலை மற்றும்வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகித்து வருகிறது.
அரசின் அனுமதியுடன் பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வானாபாடி ஊராட்சி மாணிக்கம் நகா் பகுதியில் எரிவாயு குழாய்களை இணைப்பதற்காக சாலையோரத்தில் வால்வு அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
இதனை கவனிக்காமல் ஓட்டுநா் தினேஷ் என்பவா் சரக்கு வாகனத்தை அதன் மீது மோதியுள்ளாா். இதனால், வால்வில் சேதம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த தனியாா் நிறுவன ஊழியா்கள் எரிவாயு விநியோகத்தை நிறுத்தி, சேதமடைந்த வால்வினை சரி செய்தனா்.
இதுதொடா்பாக, ஓட்டுநா் தினேஷ் மீது ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு இணைப்பு சேதமடைந்ததற்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளனா்.