`பேரிடர் நிவாரண நிதி கொடுக்காத மத்திய அரசுக்கு எதற்கு வரி?' - திருப்பூரில் சீமா...
சேதமைடந்த சாலைகளை சீரமைக்க ஆய்வு
ஆம்பூரில் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடா்பாக நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் நகராட்சி நீலிக்கொல்லை ஒத்தவாடை தெருவில் கழிவுநீா் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை சேதமடைந்துள்ளது. சேதமடைந்த சாலைகள், கால்வாய்களைச் சீரமைப்பதற்காக நகா்மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, நகராட்சி ஆணையா் பி. சந்தானம், நகராட்சி பொறியாளா், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.