செய்திகள் :

Bigg Boss: 'பிக்பாஸ், உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா?' - இந்தி பிக்பாஸில் கலக்கும் `போல்டு’ ஸ்ருதிகா

post image

டிகர் தேங்காய் சீனிவாசனோட பேத்தி, நடிகர் சூர்யாவோட 'ஶ்ரீ' படத்துல ஹீரோயினா அறிமுகமானவர், குக் வித் கோமாளி அப்படிங்கிற அடையாளங்களோட இதுநாள் வரைக்கும் பார்க்கப்பட்டு வந்த ஸ்ருதிகாவை, அவர் இந்தி பிக்பாஸ் பாஸ் சீசன் 18-க்குப் போன பிறகு, 'நம்ம ஸ்ருதிகா'ன்னு நெட்டிசன்கள் கொண்டாடிக்கிட்டிருக்காங்க. அந்தளவுக்கு ஸ்ருதிகாவோட நகைச்சுவைப் பேச்சும், சமயோஜிதப்புத்தியும், வெளிப்படைத்தன்மையும் சமூகவலைத்தளங்கள்ல இதய எமோஜியை வாங்கிக் குவிச்சிட்டிருக்கு.

ஸ்ருதிகா ரொம்ப வேகமா பேசக்கூடியவர். அப்படி வேக வேகமா இந்தி பேசுறப்போ சில தமிழ் வார்த்தைகளை போறபோக்குல பேசறதும், அதுக்கு என்ன அர்த்தம்னு ஸ்ருதிகா, இந்தி பிக்பாஸ்கிட்ட சொல்றதும் செம க்யூட்டா இருக்கும். ஹவுஸ் மேட்ஸுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்திட்டிருந்த ஸ்ருதிகா, கொஞ்ச நாள் முன்னாடி இந்தி பிக்பாஸுக்கும் தமிழ் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சிருக்கார்.

ஸ்ருதிகாவிடம் பேசுவதற்கு கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கிற பிக்பாஸ், 'நானும் உங்க கணவரும் மசாஜ் பண்ணிக்க தாய்லாந்து டூருக்குப் போகப்போறோம்னு சொல்ல, 'நான் 12 வருஷமா என் அர்ஜுனை நல்லப்பையனா வளர்த்திருக்கேன். அதனால, அவன் என்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டான்'னு சொல்றார் ஸ்ருதிகா.

அதோட விட்டாரா... 'உங்களுக்கு கேர்ள் ஃபிரெண்ட் இருக்காங்களா; உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா'ன்னு பிக்பாஸையே கேள்வி கேட்கிறார். கூடவே, 'உங்களுக்குக் கல்யாணமாகிடுச்சின்னுதான் நினைக்கிறேன். அதனாலதான் நீங்க எங்ககிட்ட ரொம்ப கூலா பழகுறீங்க. உங்க மனைவியும் உங்களை ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்கன்னு கலாய்க்கிறார். மிரண்டுபோன இந்தி பிக்பாஸிடம், ' ஏய், நீ எங்குமே சென்னைய விட்டு வெளிய போகக்கூடாதுன்னு தமிழ்ல என் ஹஸ்பெண்டை மிரட்டுங்கன்னு’ சொல்றார். ஸ்ருதிகா இந்த வார்த்தைகளை தமிழ்ல சொல்ல சொல்ல அதே அப்படியே தமிழ்ல சொல்றார் இந்தி பிக்பாஸ். பேச்சுவார்த்தை முடிஞ்சு கன்ஃபெஷன் ரூமை விட்டு வெளியே வர்ற ஸ்ருதிகாவுக்கு தமிழ்ல 'bye' சொல்லி அனுப்புறார் இந்தி பிக்பாஸ். அதை சொல்லிக் கொடுத்ததும் நம்ம ஸ்ருதிகாதான். ஆக, இந்தி பிக்பாஸும் ஸ்ருதிகாகிட்ட தமிழ் கத்துக்க ஆரம்பிச்சிருக்கார்.

சும் தரங்

இன்னொரு எபிசோடில், 'Age Card-ஐ யார் பயன்படுத்துறாங்கன்னு சல்மான்கான் கேட்க, ஷில்பாங்கிற ஒரு ஹவுஸ் மேட்டுக்கு கொடுக்கலாம்னு சொல்றார் ஸ்ருதிகா. 'ஷில்பா நடுத்தர வயசுல இருக்கிறததான் ஸ்ருதிகா அப்படி கேலியா சொல்றாரோ'ன்னு எல்லோரும் யோசிக்க, ஸ்ருதிகாவோட கோணம் அப்படியில்லாம வேற மாதிரி ரொம்ப அழகா இருக்கு. 'அவங்க எல்லாரையும்விட ரொம்ப மெச்சூர்டா நடந்துக்கிறாங்க. எல்லாரையும் அரவணைச்சிப்போறாங்க. அதனால, அவங்களுக்கு Age Card கொடுக்கலாம்னு சொல்றாங்க.

ஸ்ருதிகா ஃபன்னா பேசக்கூடியவங்கன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, ஒரு தப்பை முகத்துக்கு நேரா போல்டா சொல்லக்கூடியவங்க அப்படிங்கிறதை இந்தி பிக்பாஸ் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கு. ஓர் எபிசோடுல, ஹவுஸ்மேட்டைப் பார்த்து 'உன்ன மாதிரி ஃபுட்டேஜுக்காக நம்பினவங்களை கைவிடுற ஆளு நான் இல்லை'ங்கிறாங்க. இன்னோர் எபிசோடுல, ஹவுஸ்மேட்டைப் பார்த்து 'நீ சொல்றது ஒண்ணு. நீ செய்யுறது ஒண்ணு'ன்னு நெத்தியடியா பேசுறார். இன்னோர் எபிசோடுல, 'நான் பொய்யா இனிமையா பேசுற ஆள் கிடையாது'ங்கிறார் போல்டா.

நடிகை ஸ்ருதிகா

இவ்ளோ போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் ஸ்ருதிகா கண்ணீர் விட்டு அழற ஓர் எபிசோடும் வெளியாகி இருக்கு. என்ன விஷயம்னு போய்ப்பார்த்தா, அவ்ளோ எமோஷனல் நேரத்துலேயும் செம தெளிவா பேசுறாங்க ஸ்ருதிகா.

இந்தி பிக்பாஸ் சீசன் 18-ல ஸ்ருதிகாவோட பெஸ்ட் ஃபிரெண்ட்னா 'சும் தரங்'தான். அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவங்க சும் தரங். இவங்க ஒரு மாடல், நடிகை, சமூக ஆர்வலரும்கூட. ஸ்ருதிகாவுக்கும், சும்முக்கும் நடுவுல சண்டை வர, சும் தரங் பிக்பாஸ் வீட்டுக்குள்ளப்போயி அழ ஆரம்பிக்கிறாங்க. அவங்களை சமாதானப்படுத்த வீட்டுக்குள்ளப் போறாங்க ஸ்ருதிகா. பேசினா சரியா போகிற பிரச்னைதான்னு, ஸ்ருதிகா சும் கிட்ட பேச ட்ரை பண்றாங்க. இவங்க ரெண்டு பேரையும் சமாதானம் செய்றேங்கிற பேர்ல, சும்மையும் ஸ்ருதிகாவையும் பேச விடாம தடுக்கிறாங்க ஒரு ஹவுஸ்மேட். இத புரிஞ்சுக்கிட்ட ஸ்ருதிகா 'நீங்க எங்களை தனியா விட்டா நாங்களே பேசி சமாதானம் செஞ்சுப்போம்'னு போல்டா சொல்றாங்க.

மறுநாள் காலையில, நடந்த சம்பவத்துக்கு சும், ஸ்ருதிகா கிட்ட மன்னிப்புக் கேட்க, 'நீ ஸாரி கேட்க வேண்டாம். நீ ரொம்ப நல்ல மனசு கொண்டவ. ஆனா, இனிமே நாம தள்ளி இருந்துக்கலாம். ஆனா, என் அன்பு உன்மேல அப்படியே தான் இருக்கும்னு சொல்றாங்க ஸ்ருதிகா.

இதற்கெல்லாம் முன்னதாக, நிகழ்ச்சியின் முதல் நாளிலே, சல்மான் கானிடம், தான் நடித்த படங்கள் சரியா போகவில்லை என்பதை வெளிப்படையாக நகைச்சுவையாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஸ்ருதிகாவோட இந்த கேரக்டரை பாசிட்டிவ் கமென்ட்ஸ் போட்டுக் கொண்டாடிட்டு இருக்காங்க நெட்டிசன்ஸ்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/Neerathikaaram

BB Tamil 8: இந்த வாரதிற்கான கேப்டன்ஷிப் டாஸ்கிற்கு மோதிக்கொண்ட ஜெஃப்ரி, சாச்சனா- வென்றது யார்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8, 57 நாட்களைக் கடந்திருக்கிறது.18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். முதல் வாரத்திலேயே ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.... மேலும் பார்க்க

BB Tamil 8: நாமினேட் ஆன முத்துக்குமரன், ஆனந்தி, அன்ஷிதா; இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக் பாஸின் 57-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.இன்றைய புரோமோவில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய நபர்களைச் சரியான காரணத்துடன் தேர்வு செய்து சொல்லணும் என்று பிக் பாஸ் கூறுகிறார... மேலும் பார்க்க

Kayal & Siragadikka aasai : ஒரு ஊரே கயலை எதிர்ப்பது ஏன்? | மலேசியா மாமாவால் ரோகிணிக்கு ஆபத்து?

கயல் சீரியலில் பொதுவாக யார் கடத்தப்பட்டாலும் எழில் தான் அவர்களை மீட்பார். ஆனால் இம்முறை எழிலையே கடத்திவிட்டார்கள். எனவே அவரை மீட்க கயல் என்ன செய்யப் போகிறார் என்பது தான் சஸ்பன்ஸ்.கயல் திருமணம் முடிந்த... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 56: `பவித்ராவை கார்னர் செய்த விசே; அம்பலப்பட்ட இருட்டுக்கடை திருட்டு பிரியாணி'

‘மிட்நைட் பிரியாணி’ என்றொரு சமாச்சாரம் பல்வேறு இடங்களில் இருப்பது தெரியும். ஆனால் அதன் ‘மெயின் பிராஞ்ச்’ பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது அதிர்ச்சிகரமான தகவல். இது முந்தைய வாரங்களில் நடந்த விஷயமாக இருந... மேலும் பார்க்க

Sandhya Raagam: காதலியைக் கரம் பிடித்த `சந்தியா ராகம்' தொடர் நடிகர்... குவியும் வாழ்த்துகள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சந்தியா ராகம்'. இந்தத் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் குருவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றிருக்கிறது.சந்தியா ர... மேலும் பார்க்க