செய்திகள் :

உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! ஏற்றத்தில் புளூ சிப் நிறுவனப் பங்குகள்!

post image

மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று உயர்வுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 445.29 புள்ளிகள் உயர்ந்து 80,248.08 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 144.95 புள்ளிகள் உயர்ந்து 24,276.05 புள்ளிகளாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 80,337.82 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 79,308.95 புள்ளிகளுடன் வர்த்தகமானது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, டைட்டன், மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, டிவிஎஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது. அதே வேளையில் என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.

இதையும் படிக்க: இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.283 கோடி அபராதம் விதிப்பு

மும்பை பங்குச் சந்தையில் 2,509 பங்குகள் ஏற்றத்திலும், 1,546 பங்குகள் சரிந்தும், 182 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமானது.

சிமெண்ட் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்த நிலையில், அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் சுமார் 4 சதவிகிதம் லாபத்துடன், மும்பை பங்குச் சந்தையில் ரூ.11,639.65 என்று வர்த்தகமானது.

நிஃப்டி ஆட்டோ, ஐடி, மெட்டல், பார்மா மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் 1 முதல் 3 சதவிகிதம் வரை உயர்ந்தன. மைக்ரோடெக் டெவலப்பர்ஸ், கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ், டிஎல்எஃப் மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. நவம்பர் மாத விற்பனைக்கு பிறகு ஆட்டோ பங்குகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் சியோல் குறைந்தும், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்தும் முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ.4,383.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,723.34 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் மெத்தன செயல்திறன் மற்றும் பலவீனமான நுகர்வு காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில், சுமார் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சியானது நவம்பர் மாதத்தில், 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 56.5 ஆக சரிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.85 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 72.45 டாலராக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் கடந்த அமர்வில் (வெள்ளிக்கிழமை) 759.05 புள்ளிகள் உயர்ந்து 79,802.79 புள்ளிகளில் நிலைபெற்றது. நிஃப்டி 216.95 புள்ளிகள் உயர்ந்து 24,131.10 ஆக முடிந்தது.

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

பங்குச்சந்தை இன்று (டிச. 2) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முழுக்க பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் இந்த வாரமும் ஏற்றத்துடனே தொடங்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தன... மேலும் பார்க்க

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 45 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் 29.79 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது சேவைகள், கணினி, தொலைத்தொடர்பு மற்றும... மேலும் பார்க்க

பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் அமைப்பு கோரிக்கை!

கொல்கத்தா: காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல், அன்னிய நேரடி முதலீட்டை மேலும் உயர்த்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக ஆயுள் நிறுவன க... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி நிகர லாபம் 17% உயா்வு

பொதுத் துறையைச் சோ்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 17 சதவீத நிகர லாப உயா்வைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

நேற்றைய வீழ்ச்சிக்குப் பிறகு 1% உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளை வாங்கியதால், பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவிகிதம் உயர்ந்து முடி... மேலும் பார்க்க

ரூ.8,500 கோடி நிதி திரட்டிய சொமேட்டோ!

புதுதில்லி: உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' ஈக்விட்டி பங்குகளை, தனிப்பட்ட முறையில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு, விற்பனை செய்ததன் மூலம் ரூ.8,500 கோடி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.முன்மொழியப... மேலும் பார்க்க