செய்திகள் :

Senthil Balaji: `உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது; பதவி நீக்குங்கள்’ - முதல்வரை சாடிய ராமதாஸ்

post image

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மிகநீண்ட இழுபறிக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி பிணை வழங்கியது.

பிணையில் வந்த செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. அவரது பிணை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூட மனு தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி பதவியில் இருந்தால் வழக்கு தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட அல்லது சமரசம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம், பிணை கொடுத்த மறுநாளே செந்தில் பாலாஜிக்கு பதவி வழங்கப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

Senthil Balaji

இந்த வழக்கு விசாரணை 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என குரலெழுப்பியுள்ளார் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

இது குறித்து அவர், "சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இரண்டாம் நாளிலேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டதற்காக தமிழக முதலமைச்சருக்கு  உச்ச நீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.  ஊழல் கறை படிந்தவரை  உடனடியாக அமைச்சராக்கியதன் மூலம் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் களங்கத்தைச் சேர்த்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெறுவதற்காக செந்தில்பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் ஒருவரான வித்யாகுமார் என்பவர், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக பிணையை ரத்து செய்யக் கோரியும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”என்ன இது. செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் நேரடியாக அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். இது நிறுத்தப்பட வேண்டும். அவர் அமைச்சராக்கப்பட்டதால், வழக்கின் சாட்சிகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற பொதுமக்களின் அச்சம் நியாயமாக்கப்படும்” என்று தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர் சித்தார்த்தா லூத்ராவை நோக்கி வினா எழுப்பியுள்ளார்.

"நீதியரசர் எழுப்பிய வினாக்களையும் தெரிவித்த கண்டனத்தையும் தமிழக அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நோக்கி எழுப்பப்பட்ட வினாவாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் மாத இறுதியில் பிணை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டாவது நாளே செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது மட்டும் சிக்கல் அல்ல. அதையும் தாண்டி செந்தில் பாலாஜியை தியாகி என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருந்தார்.

மு.க.ஸ்டாலின்

அப்போதே அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர்.  நடுநிலை தவறாத நீதிபதியாக  இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரின் கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை” என்று கூறியிருந்தேன். எனது ஐயம் சரியானது தான் என்பது இப்போது உச்ச நீதிமன்ற நீதியரசர் தெரிவித்த கருத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மிக அதிக அதிகாரம் பெற்ற அமைச்சராக செந்தில் பாலாஜி திகழும் நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதாக இருக்காது. எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி,  செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Nitin Gadkari: `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த...' - யாரைச் சொல்கிறார் நிதின் கட்கரி

பிரதமர் மோடியின் கேபினெட்டில் மத்திய நெடுஞ்சாலைத் துறையைக் கவனித்துவரும் நிதின் கட்கரி, `அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்கள் நிறைந்த கடல்' என்று அரசியல் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார்.நாக்பூரில் '... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 'உள்துறை தான் வேண்டும்' - அடம் பிடிக்கும் ஷிண்டே, அசராத பாஜக

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அறுதிப்பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முதல்வர் பதவியை பா.ஜ.க-விற்கு விட்டுக்கொடுத்துள... மேலும் பார்க்க

"அவர் எதிர்கட்சித் தலைவர் குற்றம் சொல்வது அவரின் கடமை"- முதல்வர் ஸ்டாலின் கூறியதென்ன?

ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்; நிலவரம் என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நான்கு ரோடு சாலை கடை காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் போன்றவற்றில் மழை நீர் சூழ்ந்தது. இந்த மழை நீரால் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள... மேலும் பார்க்க

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: வசமாக சிக்கிக் கொண்டதா திமுக அரசு?!

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த மதுரை - அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்திருக்கிறது. இதற்கு பொதுமக்கள், விவச... மேலும் பார்க்க