செய்திகள் :

Kayal & Siragadikka aasai : ஒரு ஊரே கயலை எதிர்ப்பது ஏன்? | மலேசியா மாமாவால் ரோகிணிக்கு ஆபத்து?

post image

கயல் சீரியலில் பொதுவாக யார் கடத்தப்பட்டாலும் எழில் தான் அவர்களை மீட்பார். ஆனால் இம்முறை எழிலையே கடத்திவிட்டார்கள். எனவே அவரை மீட்க கயல் என்ன செய்யப் போகிறார் என்பது தான் சஸ்பன்ஸ். 

கயல் திருமணம் முடிந்ததும் தன் தந்தையின் மீதிருக்கும் பழியை பொய் என்று நிரூபிக்க சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகிறார். சொந்த ஊரில் கயலுக்கு பிரச்னை மேல் பிரச்னை வருகிறது. 

அங்கு கயல் மீது ஆசை வைத்திருக்கும் சரவண வேலுவால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார். கயலை நம்ப வைத்து சரவண வேலு ஏமாற்றுகிறார்.

Kayal

வேலு எழிலை கத்தியால் தாக்குகிறார்.  எழில் தற்போது கத்திக்குத்து காயத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவருக்காக கயல் கோவிலில் கடுமையான பிரார்த்தனைகளை செய்கிறார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எழில் திடீரென காணாமல் போக, கயல் வேலுவிடம் சென்று எழில் எங்கே என்று கேட்கிறார். வேலு எழிலை என்ன செய்தார், கயல் எப்படி கண்டுபிடிப்பார் என்பது இந்த வாரம் தெரியும்.

இதனிடையே குலதெய்வக் கோவிலுக்கு சென்ற கயல் குடும்பத்தை அங்கிருக்கும் மக்கள் அவமானப்படுத்துகின்றனர். கயலின் அப்பா பணத்தை ஏமாற்றி விட்டு ஓடியதாக சொல்கிறார்கள். கயல் குடும்பம் இந்த ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர். ஊரார் முன்னிலையில் தன் தந்தை குற்றமற்றவர் என்பதை கயல் எப்படி நிரூபிப்பார்?

Kayal

கயல் சீரியலில் வழக்கமாக பெரியப்பா, சிவசங்கரி மூலம் தான் பிரச்னைகள் வரும், இம்முறை ஒரு ஊரே கயலுக்கு எதிராக நிற்கிறது. எனவே இந்த வாரம் கதை விறுவிறுப்பாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தப்பித்து கொண்டே இருக்கிறார் என ரசிகர்கள் வருந்துகின்றனர். இம்முறை ரோகிணியின் மலேசியா மாமாவாக நடித்த கறிக்கடைக்காரர் மீனா கண்ணில் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் துண்டை வைத்து தன் முகத்தை மறைத்து தப்பித்துவிட்டார். ஆனால் அவர் ரோகிணியிடம் சென்று ஒருவேளை நான் மீனாவிடம் சிக்கினால் உண்மைகளை சொல்லிவிடுவேன் என்று சொல்லிவிடுகிறார்.

மற்றொருபுறம் க்ருஷை சேர்த்த பள்ளியில் தான் அண்ணாமலை ஆசிரியராக வேலை செய்யப் போகிறார். எனவே அவரிடம் கண்டிப்பாக க்ருஷ் மூலமாக ரோகிணி சிக்க வாய்ப்புகள் அதிகம். மனோஜுக்கு கடையில் மந்திரித்த முட்டை வைத்திருப்பதாக வேலை செய்பவர் சொல்ல, அதை நம்பி பரிகாரம் செய்கிறார்.

Siragadikka aasai

ரோகிணி கறிக்கடைக்காரர் மூலம் சிக்குவாரா அல்லது அண்ணாமலை கண்ணில் மாட்டுவாரா என்பது இந்த வாரம் தெரியும். மீனா தனக்கு கிடைத்திருக்கும் ஆர்டரை வெற்றிகரமாக செய்து முடிப்பாரா?  

ரோகிணியின் தோழி முத்துவின் மொபலை தவறவிடுகிறார். அது செருப்பு தைக்கும் முதியவர்கள் கைகளில் கிடைக்கிறது. அது எப்படியும் முத்து கைகளில் கிடைத்துவிடும். முத்து மொபைலில் இருந்து சிட்டிக்கு வீடியோ போனது வெளிவரும். இந்த உண்மைகள் மட்டும் வெளிவந்தால் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும். 

 மேலே சொன்ன விஷயங்களில் எது நடந்தாலும் ரோகிணிக்கு ஆப்பு தான். பொறுத்திருந்து பார்ப்போம். 

Bigg Boss: 'பிக்பாஸ், உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா?' - இந்தி பிக்பாஸில் கலக்கும் `போல்டு’ ஸ்ருதிகா

நடிகர் தேங்காய் சீனிவாசனோட பேத்தி, நடிகர் சூர்யாவோட 'ஶ்ரீ' படத்துல ஹீரோயினா அறிமுகமானவர், குக் வித் கோமாளி அப்படிங்கிற அடையாளங்களோட இதுநாள் வரைக்கும் பார்க்கப்பட்டு வந்த ஸ்ருதிகாவை, அவர் இந்தி பிக்பாஸ... மேலும் பார்க்க

BB Tamil 8: நாமினேட் ஆன முத்துக்குமரன், ஆனந்தி, அன்ஷிதா; இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக் பாஸின் 57-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.இன்றைய புரோமோவில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய நபர்களைச் சரியான காரணத்துடன் தேர்வு செய்து சொல்லணும் என்று பிக் பாஸ் கூறுகிறார... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 56: `பவித்ராவை கார்னர் செய்த விசே; அம்பலப்பட்ட இருட்டுக்கடை திருட்டு பிரியாணி'

‘மிட்நைட் பிரியாணி’ என்றொரு சமாச்சாரம் பல்வேறு இடங்களில் இருப்பது தெரியும். ஆனால் அதன் ‘மெயின் பிராஞ்ச்’ பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது அதிர்ச்சிகரமான தகவல். இது முந்தைய வாரங்களில் நடந்த விஷயமாக இருந... மேலும் பார்க்க

Sandhya Raagam: காதலியைக் கரம் பிடித்த `சந்தியா ராகம்' தொடர் நடிகர்... குவியும் வாழ்த்துகள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சந்தியா ராகம்'. இந்தத் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் குருவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றிருக்கிறது.சந்தியா ர... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: இந்த வாரம் Double Evictionஆ? Sivakumarக்கு அடுத்து யாரா இருக்கும்?

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க