செய்திகள் :

Virat Kohli: `யாரும் செய்யாத சாதனை'- சாத்தியப்படுத்துவாரா கோலி?

post image
சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்த வரலாற்றுத் தோல்வியுடன், பார்டர் கவாஸ்கரில் விளையாட ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பும்ரா தலைமையில் மாபெரும் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட் சொதப்பியதால் இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தபோதிலும் பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர், ஆஸ்திரேலியாவை 104 ரன்களில் சுருட்டினர்.

இந்திய அணி

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோரின் சதம் மற்றும் கே.எல். ராகுலின் அரைசதம் என இந்தியா 487 ரன்கள் குவிக்க, பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா, வாஷிங்க்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி என மொத்த பவுலிங் யூனிட்டும் சேர்ந்து ஆஸ்திரேலியாவை 238 ரன்களில் சுருட்டியது. இதன்மூலம், 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவில்1977-க்குப் (222 ரன்கள் வித்தியாசம்) பிறகு தனது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியோடு, ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சச்சினை (6 சதங்கள்) முந்தினார் கோலி (7 சதங்கள்). மேலும், ஆஸ்திரேலியாவில் 2018-க்குப் பிறகு சதம் அடித்திருக்கும் கோலி, தனது டெஸ்ட் கரியரில் 30-வது சதத்தைப் பதிவு செய்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை செய்யாத அரிய சாதனையை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு கோலிக்குக் கிடைத்திருக்கிறது.

விராட் கோலி

அதாவது, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் அவர்களுக்கெதிராக எந்தவொரு வெளிநாட்டு வீரரும் 10 சதங்கள் அடித்ததில்லை. அதிகபட்சமாக, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜேக் ஹோப்ஸ் 9 சதங்கள் அடித்திருக்கிறார். இப்போதைக்கு, ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலின் டாப் 10 லிஸ்டில் இருக்கும் ஒரே ஆக்டிவ் பிளேயரான விராட் கோலி 7 சதங்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்திருக்கும் ஆக்டிவ் பிளேயர்ஸ் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் இன்னும் தனது சென்சுரி கணக்கைத் தொடங்கக் கூட இல்லை. அதேபோல், இரண்டாவது இடத்தில இருக்கும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஆஸ்திரேலியாவில் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். எனவே, இவர்கள் எளிதில் தொட முடியாத தூரத்தில் முன்னிலையில் இருக்கும் கோலி இன்னும் மூன்று சதங்கள் அடித்தால், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றைப் பதிவு செய்வார். அதுவும், தற்போது நடந்துகொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரில் மீதமிருக்கும் 4 டெஸ்ட் போட்டிகளில் அடிக்க வேண்டும்.

விராட் கோலி

ஏனெனில், இந்தத் தொடருக்குப் பிறகு இந்தியா மீண்டும் எப்போது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் என்று தெரியாது. ஒருவேளை, அடுத்த பார்டர் கவாஸ்கர் தொடர் 2026-ல் இந்தியாவில் நடைபெற்றால், அதற்கடுத்த பார்டர் கவாஸ்கர் தொடர் 2027 அல்லது 2028-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறக்கூடும். அப்போது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் கோலி இருப்பாரா என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியாது. எனவே, மீதமிருக்கும் 4 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் அடித்து சாதனைப் பட்டியலில் தனது பெயரைப் பதியவைப்பாரா என்பதை அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் பார்க்கலாம்.

`நாங்கள் பும்ராவை எதிர்கொண்டோம் என்று பேரக்குழந்தைகளிடம்..!’ - புகழ்ந்து தள்ளிய டிராவிஸ் ஹெட்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. முதல் போட்டியில் கே... மேலும் பார்க்க

Jay Shah : `ஐ.சி.சியின் தலைவராக ஜெய்ஷா!' - முன் நிற்கும் சவால்கள் என்னென்ன?

கிரிக்கெட் உலகின் முக்கியப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார் ஜெய் ஷா. ஆம், நேற்று முதல் ஐ.சி.சியின் சேர்மன் பதவியை ஏற்றிருக்கிறார். இதுவரை பிசிசிஐயின் செயலாளராக இருந்து இந்திய கிரிக்கெட்டைக் கவனித்தவர், ... மேலும் பார்க்க

Deepak Chahar: "இதனால்தான் CSK என்னை எடுக்கவில்லை.." - IPL ஏலத்துக்குப் பின் மனம் திறந்த தீபக் சஹார்

ப்தேதிகளிசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தன்னை ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எடுக்காதது குறித்து தீபக் சஹார் மனம் திறந்திருக்கிறார்.கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற்ற... மேலும் பார்க்க

Champions Trophy 2025: `ஹைபிரீட் முறையில் நடத்த தயார்! ஆனால்..' -பாகிஸ்தான் முன்வைக்கும் நிபந்தனைகள்

சாம்பியன்ஸ் டிராபி 2025 -ஐ பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா பங்கேற்பது குறித்து பல சலசலப்புகள் ஏற்பட்டுவிட்டன. 26/11 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தா... மேலும் பார்க்க

IPL 2025: கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்... விராட் கோலியை முந்திய வீரர் யார்?

ஐ.பி.எல் 2025-கான மெகா ஏலம் நிறைவடைந்திருக்கிறது. பல ஆச்சரியங்கள் நடந்துள்ள இந்த ஏலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்த நம் பார்வையை மாற்றுவதாக அமைந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரிஷப் பண்... மேலும் பார்க்க

Champions Trophy: `26/11 பிறகு 5 முறை இந்தியாவுக்கு வந்துவிட்டோம்!' - பிசிசிஐ விமர்சிக்கும் அப்ரிடி

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என்பது பிசிசிஐயின் நிலைப்பாடு. தாங்கள் ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்பது பிசிச... மேலும் பார்க்க