Death Clock: உங்கள் மரணத்தைக் கணிக்கும் AI செயலி... ஆர்வம் காட்டும் மக்கள்!
பாரம்பரிய சுற்றுலாவிற்கு ஏற்றயிடமாக மேற்கு வங்கம் தேர்வு: மமதா புகழாரம்
கொல்கத்தா: பாரம்பரிய சுற்றுலாவிற்கு தகுதிவாய்ந்த இடமாக மேற்கு வங்கத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளதாகவும் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தின் சுற்றுலா துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அம்மாநில சட்டமன்றத்தில் அவர் பேசுகையில், பாரம்பரியம்,தேயிலை மற்றும் மதம் சார்ந்த சுற்றுலாவில் மாநில அரசினால் மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மேற்கு வங்கத்தில் பாரம்பரிய சுற்றுலா தளங்களை உருவாக்குவதில் மாநில அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறிய அவர், மதம் சார்ந்த சுற்றுலா தளங்களை முன்னேற்றுவதற்கு வழிப்பாட்டு தளங்ளான தக்ஷினேஸ்வரர் கோயில் மற்றும் காளிகாட் கோயில் போன்ற இடங்களை மேம்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திகாவில் கட்டப்பட்டு வரும் ஜெகனாத் கோயிலிலும் விரைவில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்திலுள்ள ஒவ்வொரு இடத்தின் தனிச்சிறப்பையும் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் அந்தந்த சுற்றுலா தளங்களை சுற்றியிலும் ஆயிரக்கணக்கான ஒட்டல்கள் வந்திருப்பதாகவும், இதனால் சுற்றுலாத்துறை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வருடந்தோறும் கங்காசாகர் மேலா நடைப்பெறும் கங்காசாகர் தீவில், முறிகங்கா நதியின் மேல்பாலம் ஒன்று கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், கட்டமைப்புகள் வளர்ச்சி பெறுவதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இதுகுறித்து அம்மாநிலத்தின் சுற்றுலா துறை அமைச்சர் இந்திரானில் சென் கூறியதாவது:
சுமார் 2,489 சுற்றுலா விடுதிகள் அம்மாநிலத்தில் திறக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 65 சதவிகித்திற்கும் மேல் வடக்கு வங்காளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.