Vikrant Massey: ` அப்போ டி.வி; இப்போ சினிமா' - 12th Fail நடிகர் சினிமாவிலிருந்து...
மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 4 மாணவர்களுக்கு ஜாமீன்!
மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கு தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ஆ.சுந்தா் (19). சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த சுந்தா், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவா்களால் தாக்கப்பட்டாா்.
இதில் தலையில் பலத்த காயத்துடன், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
இதையும் படிக்க: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!
இது குறித்து, பெரியமேடு காவல் ஆய்வாளா் டி.திருமால் வழக்குப் பதிந்து, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவா்களைக் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(டிச. 2) விசாரணைக்கு வந்த நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
2 மாணவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பணியாற்றவும், மற்ற 2 மாணவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமணையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.