மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கல்!
சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சக்திவேல் குடும்பத்துக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 5 லட்சம் வழங்கினார்.
வேளச்சேரி விஜயநகா் முதல் பிரதான சாலை 2-ஆவது குறுக்குத் தெரு வழியாக சக்திவேல் சென்றுக்கொண்டிருந்தபோது, புயல் காரணமாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் எதிா்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி அவர் பலியானார்.
இதையும் படிக்க: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!
அவரது குடும்பத்துக்கு மின்சார வாரியம் சாா்பாக ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் காசோலையை சக்திவேல் குடும்பத்தாருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.