செய்திகள் :

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

post image

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் கனமழை பெய்தது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிவாரணங்களை முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்தார்.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5,000 வழங்கப்படும்.

புதுச்சேரியில் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தயடுத்து நால்வரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.

மேலும் கனமழையால் உயிரிழந்த ஒரு மாட்டிற்கு ரூ. 40,000, கிடாரி கன்றுகுட்டிக்கு ரூ. 20,000,

சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ. 10,000, சேதமடைந்த கூரை வீட்டிற்கு ரூ. 10,000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் -கன்னியாகுமரி, ராமேசுவரம் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இ... மேலும் பார்க்க

கோவையில் பரோட்டா சாப்பிட்டு உறங்கிய மருத்துவ மாணவி பலி!

கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மருத்துவ மாணவி, பரோட்டா சாப்பிட்டு இரவு உறங்கச் சென்றவர் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, துடியலூர் அருகே உள்ள கவுண்டம்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் படிப்படியாக இயக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இட... மேலும் பார்க்க

விழுப்புரத்திலிருந்து படிப்படியாக புறப்படத் தொடங்கும் ரயில்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இட... மேலும் பார்க்க

ரயில் சேவையில் மாற்றம்! திருச்செந்தூர் ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்!!

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கப்படுகிறதா?

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் க்யூஆர் கோடு முறையில் பில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதும், மது விற்பனையில் வெளிப்படைத் தன்மை மற்றும் மோசடிகள் குறையும் என அறிவிப்புகள் தெரிவித்தன.சரி இந்த ... மேலும் பார்க்க