செய்திகள் :

ரயில் சேவையில் மாற்றம்! திருச்செந்தூர் ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்!!

post image

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தபோது, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக விழுப்புரம் நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலம் மற்றும் திருக்கோவிலூர் - தண்டரை இடையே உள்ள ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பின்வரும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் அதிவிரைவு ரயில்(20605) மாலை 4.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பவிருந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே பகுதியாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட சென்னை எழும்பூர் - மன்னார்குடி ரயில்(16179) சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 10.55 மணிக்குப் பதிலாக 11.55 மணிக்குப் புறப்படும்.

வழித்தடம் மாற்றம்:

பிர்சாபூர் - ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில்(20498) வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இது சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, அரக்கோணம், காட்பாடி, சேலம், கரூர், திருச்சி வழியாகச் செல்லும்.

தாமதமாக புறப்படும் ரயில்கள்:

சென்னை எழும்பூர் - கொல்லம் அதிவிரைவு ரயில்(16101) எழும்பூரில் இருந்து இன்று மாலை 5 மணிக்குப் பதிலாக 6 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில்(22661) எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.45 மணிக்குப் பதிலாக 6.45 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி ரயில் எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.20 மணிக்குப் பதிலாக 6.20 மணிக்குப் புறப்படும்.

திருவண்ணாமலை மண்சரிவு: ஒருவர் சடலம் மீட்பு! 6 பேர் கதி என்ன?

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றும் மலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மண் சரிவில், 7 போ் சிக்கியிருந்த நிலையில், தேடுதல் பணியின்போது ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நாளை (டிச.3) வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

புதுச்சேரியில் நாளை (டிச.3) வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புது... மேலும் பார்க்க

சென்னை எழும்பூர் -கன்னியாகுமரி, ராமேசுவரம் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இ... மேலும் பார்க்க

கோவையில் பரோட்டா சாப்பிட்டு உறங்கிய மருத்துவ மாணவி பலி!

கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மருத்துவ மாணவி, பரோட்டா சாப்பிட்டு இரவு உறங்கச் சென்றவர் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, துடியலூர் அருகே உள்ள கவுண்டம்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் படிப்படியாக இயக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இட... மேலும் பார்க்க

விழுப்புரத்திலிருந்து படிப்படியாக புறப்படத் தொடங்கும் ரயில்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இட... மேலும் பார்க்க