எந்தெந்த பகுதிகளில் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
சென்னை எழும்பூர் -கன்னியாகுமரி, ராமேசுவரம் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இடங்களில் ரயில் பாதைகளில் சேதம் ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
வழித்தடம் மாற்றம்:
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில்(22661) எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.45 மணிக்குப் பதிலாக 6.45 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - விழுப்புரம் வரை இந்த ரயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி அதி விரைவு ரயில் (12633) எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.20 மணிக்குப் பதிலாக 6.20 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும்.