Vikrant Massey: ` அப்போ டி.வி; இப்போ சினிமா' - 12th Fail நடிகர் சினிமாவிலிருந்து...
சத்தீஸ்கரில் யானை தாக்கியதில் 5 கால்நடைகள் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் யானை தாக்கியதில் ஒரு கன்று உட்பட 5 கால்நடைகள் உயிரிழந்தன.
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள சிரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை ஒன்று நுழைந்தது. பின்னர் அங்கிருந்த வீடு ஒன்றின் மாட்டுத் தொழுவத்தில் நுழைந்த அந்த யானை நான்கு பசுக்களையும் ஒரு கன்றுகளையும் தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் 5 கால்நடைகளும் உயிரிழந்தன என்று வன அதிகாரி குமார் நிஷாந்த் தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விட்டை சேதப்படுத்தியதோடு விவசாய வயல்களில் புகுந்த பயிர்களையும் நாசம் செய்துள்ளது. இதையடுத்து அந்த யானை வனப் பகுதிக்கு சென்றது.
புஷ்பா - 2 டிக்கெட் முன்பதிவிலேயே இத்தனை கோடிகளா?
இருப்பினும் யானை தொடர்ந்தும் அப்பகுதியில் நடமாடுவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே யானை தாக்குதலால் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரி மேலும் கூறினார்.