உ.பி.யில் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீச்சு!
உத்தரப் பிரதேசத்தில் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசிக்கு காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தது.
இந்த ரயில் தனேதா நிலையத்தை அடைந்ததும், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அதன் மீது கற்களை வீசியுள்ளனர். இதில் பெட்டியின் பி-1 ஜன்னல் சேதமடைந்தது.
தில்லியில் போராட்டத்தைத் தொடங்கும் விவசாயிகள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து ராம்பூரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பிடிக்க பரேலி சந்திப்பு முதல் ஷாஜஹான்பூர் வரை ரயில் பாதையை ஒட்டியுள்ள கிராமங்களில் ரயில்வே காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.