ஹைதராபாத்: இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுகொண்டிருந்த பெண் காவலர் கொலை
ஹைதராபாத்தில் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுகொண்டிருந்த பெண் காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹயத்நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவரின் இரு சக்கர வாகனத்தை மறித்து தாக்கிய மர்ம நபர், பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பெண் காவலர் பலியானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கொலையாளியை தேடி வருகின்றனர்.
தில்லியில் போராட்டத்தைத் தொடங்கும் விவசாயிகள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
கொலை செய்யப்பட்ட பெண் காவலர் அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்டிருந்த நிலையில், அவரது சகோதரரே அவரைக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இப்ராஹிம்பட்டினம் காவல் நிலைய காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.