H.Raja: "Dravidian Stock-களுக்கு எதிரான Fight எப்பவுமே தொடரும்" - ஹெச்.ராஜா
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று(டிச. 2) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை(நவ. 25) தொடங்கியது. இதில் சர்ச்சைக்குரிய வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட 15 மசோதாக்கள் குறித்து விவாதிக்க, நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கிய நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இரு அவைகளும் தொடங்கின.
அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
நண்பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் அவை நடவடிக்கைகள் தொடங்கின.
அதன்பின்னரும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை(டிச. 3) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | தில்லியில் போராட்டத்தைத் தொடங்கும் விவசாயிகள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறுகையில், அவை நிகழ்வுகள் முடங்கியுள்ளது பெரும் ஏமாற்றம். பாஜக கூட்டணி பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால் அவர்கள் நினைத்தபடி அவை நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்க மறுக்கின்றனர்' என்றார்.