முக்கோண காதல் கதையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ், புதிய தொடரொன்றில் நடிக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் இன்றுமுதல்(டிச. 2) ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் அன்னம். இத்தொடரில் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனிஃபர் பாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா கணேஷ் நடிக்கிறார்.
மகாநதி தொடரில் நடித்துவந்த நடிகை திவ்யா கணேஷ், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இருந்து விலகினார்.
இவர் முன்னதாக கேளடி கண்மணி, சுமங்கலி, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை திவ்யா கணேஷ்.
இந்த நிலையில், தற்போது திவ்யா கணேஷ் அன்னம் தொடரில் இணைந்துள்ளார். இது தொடர்பான முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: அயலி இணையத் தொடர் நாயகியின் புதிய சீரியல்!
அயலி இணையத் தொடரில் தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் நடித்து பிரபலமான அபி நட்சத்திரா அன்னம் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். கனா காணும் காலங்கள் -2 தொடர் பிரபலம் பரத் குமார் நாயகனாக நடிக்கிறார்.
மாமன் மகனான கார்த்திக்கை(பரத் குமார்) காதலிக்கும் அத்தை மகளான அன்னம்(அபி நட்சத்திரா), ஆனால் கார்த்திக், ரம்யாவை (திவ்யா கணேசன்) விரும்பும் முக்கோன காதல் கதையாக அமைந்துள்ளதாக அன்னம் தொடரின் முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.
மேலும் இத்தொடரில் மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்தொடர் இன்றுமுதல்(டிச. 2) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சுந்தரி தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், இத்தொடருக்கு மாற்றாக அன்னம் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.