சென்னை எழும்பூர் -கன்னியாகுமரி, ராமேசுவரம் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
சாலையின் நடுவே திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்.. மத்திய கைலாஷில் கடும் நெரிசல் - சரி செய்ப்படுமா?
சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலைகளில் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையும் ஒன்று.
இச்சாலையில் தற்போது மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அனைத்து புறங்களில் இருந்து வரும் வாகனங்களால் எப்போதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கிறது.
மத்திய கைலாஷிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் மழை நீர் வடிகால் கால்வாயின் மேல்மூடி திறந்து உள்ளது. தற்காலிக தடுப்பாக பிளாஸ்டிக் பேரிகார்ட் சாலை நடுவே குறுக்கே வைக்கப்பட்டுள்ளதால் அடையார் மற்றும் டைடல் பார்க் பகுதியில் இருந்து வரும் ஏராளமான வாகனங்களால் எளிதாக கடந்து செல்ல முடியாமல் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாதி மூடியும் மூடாமலும் உள்ள இந்த கால்வாயின் தற்காலிக தடுப்பு மற்றும் அதன் அருகில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கி இருப்பதாலும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இச்சாலையில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாயை சீர் செய்து உடனடியாக போக்குவரத்தை இடைஞ்சல் இல்லாமல் எளிதாக கடக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று கடந்து செல்லும் பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.