செய்திகள் :

H.Raja: "Dravidian Stock-களுக்கு எதிரான Fight எப்பவுமே தொடரும்" - ஹெச்.ராஜா

post image
பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா, மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளின் விசாரணையில் ஒவ்வொரு வழக்குக்கும் தலா ஆறு மாதங்கள் (ஓராண்டு) சிறைத் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஹெச். ராஜா, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'பெரியார் சிலையை உடைப்பேன்' என தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டது. மேலும், அதே ஆண்டு தி.மு.க எம்.பி கனிமொழிக்கு எதிராக அவதூறாக கருத்து கூறியதாக ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சர்ச்சைக்குள்ளான எச்.ராஜாவின் எக்ஸ் பதிவு

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரணை செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அமர்வு, "இந்த இரண்டு வழக்குகளிலும், ஹெச்.ராஜா குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வழக்குக்கும் தலா ஆறு மாதங்கள் (ஓராண்டு) சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது" என தீர்ப்பு வழங்கியது.

இன்று (நவ.2) காலை முதலே இச்செய்தி பா.ஜ.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் ஹெச்.ராஜா, "இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை. சித்தாந்த எதிரிகளுக்கு எதிராக இப்படி வழக்குகள் போடப்படுவது வழக்கமான விஷயம்தான். இந்த வழக்கில் நீதிமன்றம் இந்த மாதம் டிசம்பர் 31ம் தேதி வரை மேல்முறையீட்டுக்குக் காலக்கெடு கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய வழக்கறிஞர்கள் சட்டப்போராட்டத்தை நடத்துவார்கள்.

ஆறுபது ஆண்டுகாலமாக நான் நம்பியிருக்கும் சித்தாந்தத்தின் பக்கம் நின்று போராடி, பல வழக்குகளை சந்தித்திருக்கிறேன். எனவே, இந்த வழக்கினால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. "Dravidian Stock-களுக்கு எதிரான Fight எப்பவுமே தொடரும்" என்று பேசியிருக்கிறார்.

Rain Update: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு ரெட் அலார்ட்; சுற்றுலா பயணிகளே உஷார்

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட... மேலும் பார்க்க

சாலையின் நடுவே திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்.. மத்திய கைலாஷில் கடும் நெரிசல் - சரி செய்ப்படுமா?

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலைகளில் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையும் ஒன்று.இச்சாலையில் தற்போது மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அனைத்து புறங்களில் இ... மேலும் பார்க்க

டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி - காங்கிரஸ் பிரேக்-அப்... `இந்தியா' கூட்டணி உடைந்ததால் லாபம் யாருக்கு?!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது டெல்லி. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க என மூன்று தேசியக் கட்சிகளும் அங்கு ஆட்சியைப் பிடிக்கத் தீயென வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றன. க... மேலும் பார்க்க

வேலூர்: திறப்பு விழா நடத்தியும் திறக்கப்படாத கல்லூரி மாணவிகள் விடுதி! - அதிகாரிகள் சொல்வதென்ன?

வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடி பகுதியில் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் அரசு இளங்கலை கல்லூரி மாணவிகளுக்கான தங்கும் விடுதி கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வரால் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைக்கப்பட்டது.... மேலும் பார்க்க

வேலூர்: ஜல்லி கற்களால் விபத்து ஏற்படும் அபாயம்; எப்போதும் சீரமைக்கப்படும் தொரப்பாடி சாலை?

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையாக தொரப்பாடி சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வேலூர் மாவட்டத்தில் இருந்து முக்கிய சுற்றுலா தளங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. ஆனால் இந்த சாலையின் நடுவே மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

Annamalai: "இதற்காகத்தான் லண்டன் சென்றேன்.." - விஜய், சீமான், பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பளீர்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை லண்டனில் மூன்று மாதங்கள் தனது படிப்பை முடித்துவிட்டு இன்று (டிசம்பர் 1) சென்னை திரும்பியுள்ளார்.லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அரசியல் பயிற்சி வகுப்பாக நடத்தக்கூடிய 'Che... மேலும் பார்க்க