உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! ஏற்றத்தில் புளூ சிப் நிறுவனப் பங்குகள்!
பவளமல்லி மரமும் முதியவர் உணர்த்திய பாடம் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
கடந்த சில வருடங்களாகவே, தினமும் பவளமல்லி பூக்களை சேகரிப்பது என் வழக்கத்தில் ஒன்று. முதலில் பூத்துக் குலுங்கி , பின் மரத்தின் மீது எந்தப் பற்றும் இல்லாமல் , பின் தானாகவே உதிர்ந்து விடும் இந்தப் பூக்களின் மேல் எனக்குப் பற்று அதிகம். எந்த ஊரில் எந்த இடத்தில் வாழ்ந்தாலும், பவளமல்லி மரத்தைத் தேடி கண்டுபிடித்து விடுவேன்.
இதன் தொடர்ச்சியாகத்தான், நான் வசிக்கும் இடத்தின் அருகேயுள்ள உள்ள ஒரு கோவிலில் பவளமல்லி மரத்தைக் கண்டு கொண்டு தினம் தினம் அங்கு சென்று பூக்களை சேகரித்து வந்து மாலையாகத் தொடுத்து சுவாமி படங்களுக்கு சாற்றுவதில் ஒரு ஈடுபாடு..
நான் எப்போது சென்றாலும் , உதிர்ந்த பூக்கள் அந்த மரத்தைச் சுற்றி நிறைய இருக்கும். அத்தனை பூக்களையும் பார்க்கும் போது, அத்தனையையும் நானே எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்ற எண்ணம் மேலோங்கும்.
இன்று காலை , நான் சென்ற நேரத்தில், மிகவும் வயது மிகுந்த ஒருவர் பூக்களை சேகரித்துக் கொண்டிருந்தார். வழக்கமாக தூரத்தில் இருந்து பார்க்கும் போதே தெரியும் பூக்கள் இன்று கண்ணுக்குப் புலப்படவில்லை. அடடா.. "இந்த தாத்தா எல்லாத்தையும் எடுத்துட்டார் போலயே" என ஒரு நொடி மனதில் அவரை என் போட்டியாளராக நினைத்தபடியே... ஏதாவது பூக்கள் மிச்சமிருக்கிறதா என மரத்தின் அருகில் சென்றேன்.
அங்குமிங்குமாக சில பூக்கள் இருக்கவே, அவற்றை சேகரிக்கத் தொடங்கினேன். நான் பூக்கள் எடுப்பதை திரும்பிப் பார்த்த அந்த முதியவர், என்னைப் பார்த்து, அவர் ஒரு பெரிய பூக்கூடையில் சேகரித்த அத்தனைப் பூக்களையும் என்னிடம் நீட்டி எவ்ளோ வேணா எடுத்துக்குங்க என நீட்டினார்.
இவரையா சற்று முன் என் போட்டியாளராக நினைத்தேன் என என்னை நானே நொந்து கொண்டு, அவர் நீட்டிய பூக்கூடையிலிருந்து கொஞ்சமாக பூக்களை எடுத்துக் கொண்டேன்.
அப்போது காற்று வீசவே, நிறைய பூக்கள் மீண்டும் மீண்டும் கீழே உதிர்ந்தபடி இருந்தன. நான் மீண்டும் பூக்களை சேகரிக்க ஆரம்பித்தேன். அந்த முதியவர் மீண்டும் என்னிடம் வந்து, வேணும்னா இன்னும் எடுங்க என்று தனது பூக்கூடையை நீட்டினார். இல்ல இல்ல போதும் தேங்க்ஸ் எனக் கூறியபடியே உதிர்ந்த பூக்களை எடுத்தேன்..
எனக்குள் ஒரு உரையாடலை நானே நிகழ்த்திக் கொண்டேன்.. என்ன விதமான மனநிலை இது. விதைத்தது நான் இல்லை. செடி வளர்கையில் நீர் ஊற்றியது நான் இல்லை. பராமரிப்பில் என் பங்கு இல்லை. அந்த இடமும் எனதில்லை. அது கோவில் இருக்கும் இடத்தில் உள்ள மரம்.
கோவிலும் அதைச்சுற்றி இருக்கும் இடமும் அனைவருக்கும் பொதுவானது. இதில் பூக்களை மட்டும் நான் ஏன் சொந்தம் கொண்டாடி மகிழ்கிறேன். அதுவும் அந்தப் பூக்கள் பற்றை விட்டு விடு என எடுத்துரைக்கும் பூக்கள். அந்த முதியவரிடம் இருந்த மனப்பான்மையும் மனப்பக்குவமும் நான் பெற இன்னமும் எனக்கு மனமுதிர்ச்சி வரவில்லையே.. அது அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லையே..
மனதின் நீளம் எதுவோ.. அதுவே... வாழ்வின் நீளமடா... என்ற வரிகள் ஏனோ மனதில் வந்து சென்றது..!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...