செய்திகள் :

BB Tamil 8: நாமினேட் ஆன முத்துக்குமரன், ஆனந்தி, அன்ஷிதா; இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

post image
பிக் பாஸின் 57-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.

இன்றைய புரோமோவில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய நபர்களைச் சரியான காரணத்துடன் தேர்வு செய்து சொல்லணும் என்று பிக் பாஸ் கூறுகிறார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொருவராக வந்து ஓப்பன் நாமினேட் செய்கிறார்கள். அவ்வகையில் முதல் ஆளாக முத்துக்குமரனை நாமினேட் செய்திருக்கிறார் பவித்ரா ஜனனி. நிறைய பிரச்னைக்கு நீங்கதான் காரணமாக இருக்கீங்க என முத்துக்குமரனிடம் தெரிவித்தார் பவித்ரா. அதைக் கேட்டு முத்துக்குமரன் கூலாக சிரிக்கிறார்.

BB Tamil 8

இதையடுத்து அருண் பிரசாத்தும் முத்துக்குமரனைதான் நாமினேட் செய்திருக்கிறார். 'மத்தவங்கள தூண்டிவிடுறீங்க. அதனால் உங்களை நாமினேட் செய்கிறேன் என்றார் அருண் பிரசாத். மஞ்சரிகிட்ட நிறைய நெகட்டிவ் தான் இருக்கு என்று கூறி, அவரை அன்ஷிதாவும், ரஞ்சித்தும் நாமினேட் செய்திருக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை இல்லாததால் பவித்ரா ஜனனியை நாமினேட் செய்கிறேன் என்றார் முத்துக்குமரன்.

மண்டையக் கழுவாத மாதிரியும், கழுவுற மாதிரியும் எனக்குத் தெரியுது என ஆர்.ஜே. ஆனந்தியை நாமினேட் செய்கிறார் சவுந்தர்யா. குழந்தை தனத்தில் இருந்து வெளியே வரணும் என சாச்சனாவை நாமினேட் செய்திருக்கிறார் தீபக். புரியாத மாதிரி நிறைய இடத்தில் நடிக்கிறீங்களோனு தோனுது என ராணவை நாமினேட் செய்திருக்கிறார் ஜாக்குலின்.

BB Tamil 8

இன்னும் நீங்க பூசி மொழுகிக்கிட்டே இருக்கீங்க என ரஞ்சித்தை நாமினேட் செய்திருக்கிறார் சத்யா. இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

BB Tamil 8: இந்த வாரதிற்கான கேப்டன்ஷிப் டாஸ்கிற்கு மோதிக்கொண்ட ஜெஃப்ரி, சாச்சனா- வென்றது யார்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8, 57 நாட்களைக் கடந்திருக்கிறது.18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். முதல் வாரத்திலேயே ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.... மேலும் பார்க்க

Bigg Boss: 'பிக்பாஸ், உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா?' - இந்தி பிக்பாஸில் கலக்கும் `போல்டு’ ஸ்ருதிகா

நடிகர் தேங்காய் சீனிவாசனோட பேத்தி, நடிகர் சூர்யாவோட 'ஶ்ரீ' படத்துல ஹீரோயினா அறிமுகமானவர், குக் வித் கோமாளி அப்படிங்கிற அடையாளங்களோட இதுநாள் வரைக்கும் பார்க்கப்பட்டு வந்த ஸ்ருதிகாவை, அவர் இந்தி பிக்பாஸ... மேலும் பார்க்க

Kayal & Siragadikka aasai : ஒரு ஊரே கயலை எதிர்ப்பது ஏன்? | மலேசியா மாமாவால் ரோகிணிக்கு ஆபத்து?

கயல் சீரியலில் பொதுவாக யார் கடத்தப்பட்டாலும் எழில் தான் அவர்களை மீட்பார். ஆனால் இம்முறை எழிலையே கடத்திவிட்டார்கள். எனவே அவரை மீட்க கயல் என்ன செய்யப் போகிறார் என்பது தான் சஸ்பன்ஸ்.கயல் திருமணம் முடிந்த... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 56: `பவித்ராவை கார்னர் செய்த விசே; அம்பலப்பட்ட இருட்டுக்கடை திருட்டு பிரியாணி'

‘மிட்நைட் பிரியாணி’ என்றொரு சமாச்சாரம் பல்வேறு இடங்களில் இருப்பது தெரியும். ஆனால் அதன் ‘மெயின் பிராஞ்ச்’ பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது அதிர்ச்சிகரமான தகவல். இது முந்தைய வாரங்களில் நடந்த விஷயமாக இருந... மேலும் பார்க்க

Sandhya Raagam: காதலியைக் கரம் பிடித்த `சந்தியா ராகம்' தொடர் நடிகர்... குவியும் வாழ்த்துகள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சந்தியா ராகம்'. இந்தத் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் குருவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றிருக்கிறது.சந்தியா ர... மேலும் பார்க்க