Sandhya Raagam: காதலியைக் கரம் பிடித்த `சந்தியா ராகம்' தொடர் நடிகர்... குவியும் வாழ்த்துகள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சந்தியா ராகம்'. இந்தத் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் குருவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் மூலம் சின்னத்திரையில் பரிச்சயமானவர் குரு. `இவர் பக்கா நடிகர் மெட்டீரியல்!' என அந்த நிகழ்ச்சியின் போதே பலர் சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். பலரும் எதிர்பார்த்ததுபோல் குரு `சந்தியா ராகம்' தொடரில் கமிட் ஆனார். சமீபத்தில் நடந்து முடிந்த ஜீ குடும்ப விருதுகள் 2024-ல் `Fresh Face Of The Year' என்கிற விருதும் இவருக்குக் கிடைத்திருந்தது. முதல் தொடரிலேயே பலரையும் ஈர்த்தவர் குரு.
தற்போது குருவுக்கும் ரேச்சல் என்பவருக்கும் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ரேச்சலும் குருவும் சேர்ந்து கவர் சாங்ஸில் நடித்திருக்கிறார்கள். காதலர்களான இவர்கள் தற்போது கணவன் - மனைவியாக அவர்களுடைய அடுத்தக்கட்ட பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இவர்களுடைய திருமண ரிசப்ஷனில் சின்னத்திரை பிரபலங்கள், சந்தியா ராகம் தொடர் நடிகர்கள் எனப் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர்.
வாழ்த்துகள் குரு - ரேச்சல்!