செய்திகள் :

பெண்டிங் வழக்குகள்: அதிர வைத்த பொட்டு சுரேஷ் கொலையும் சிறையில் நாள்களை கடத்தும் அட்டாக் பாண்டியும்

post image
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வழக்குகள், மாநில, தேசிய அளவில் கவனம் பெறும். நிதி மோசடி தொடங்கி பாலியல் கொடூரங்கள், கொலைகள், சாதிய கொடுமைகள் என பல விஷயங்களுக்கு நாமும் `உச்’ கொட்டி இருப்போம். `அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?’ விவரிக்கிறது `பெண்டிங் வழக்குகள்’
தமிழகத்தையே அதிர வைத்த பொட்டு சுரேஷ் கொலை நடந்து 12 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி உள்ளிட்டோர் சிறையில் இருந்துவரும் நிலையில், இவ்வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
அட்டாக் பாண்டி - பொட்டு சுரேஷ்

கடந்த காலங்களில் தமிழகத்தில் பல அரசியல் படுகொலை சம்பவங்கள் மக்களை அதிர வைத்தன. அந்த வகையில் மதுரை மண்டலத்தில் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி, சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் ரூசோ,  சிவகங்கை நகர்மன்றத் தலைவர் முருகன், ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி ஆகியோரின் கொலைச் சம்பவங்கள் மிக மிக முக்கியமானவை.

அதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொட்டு சுரேஷ் கொலை சம்பவமாகும். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் மத்திய அமைச்சராகவும் மு.க.அழகிரி இருந்தபோது அவருக்கு மிக நெருக்கமாக இருந்து, தென் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளையும், அமைச்சர்களையும் இயக்கியவராக அறியப்படுகிறவர் பொட்டு சுரேஷ்.

 அப்படிப்பட்டவர்தான் கடந்த 2013 ஆம் ஆண்டு மதுரையில் அவர் வீட்டருகே ஒரு கும்பலால் மிகக்கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும்  அந்த சம்பவத்தால் கலங்கிப் போன மு.க அழகிரி, "நல்ல நண்பனையும், விசுவாசியையும் இழந்துவிட்டேன்...."  என்று அஞ்சலி செலுத்த வந்தபோது சொன்னார். அதேநேரம் அழகிரியின் தீவிர விசுவாசியாக இருந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

அழகிரியுடன் பொட்டு சுரேஷ்

மு.க.அழகிரியின் ஆசியால் மதுரையில் அதிகாரத்துடன் வலம் வந்த பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆகியோரால் பயன் அடைந்தவர்கள், நெருக்கமாக இருந்தவர்கள் இன்று  அரசியலிலும், பல்வேறு தொழில்களிலும், அதிகாரம் செலுத்தும் இடத்திலும் இருந்துவரும் நிலையில் கால ஓட்டத்தில் இவ்விருவரையும் மறந்து விட்டார்கள்.

இதுகுறித்து மதுரை மாவட்ட திமுகவினரிடம் பேசியபோது "தா.கிருஷ்ணன் படுகொலை சம்பவத்துக்குப்பின் தமிழகத்தையே அதிரச்செய்தது பொட்டு சுரேஷ் கொலை சம்பவம்தான். இது பொது மக்களையும், திமுகவினரையும் ரொம்பவும் கலக்கமடைய வைத்தது. சாதாரண வியாபாரியாக இருந்த பொட்டு சுரேஷ், மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் ஆதரவாளராகி அவர் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு கூடவே சென்றவர், பின்பு அவர் வீட்டில் உள்ளவர்கள் சொல்கிற வேலைகளை செய்து வந்தவர், திடீரென்று அழகிரி ஆதரவாளராக மாறினார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலிருந்த தன்னுடைய வீடியோ கேசட் கடைக்கு தினமும் வருவதை அந்த காலட்டத்தில் வழக்கமாக்கிக் கொண்ட அழகிரி, ஆதரவாளர்களை அங்கு சந்திப்பார்.

அங்கு அடிக்கடி வந்த பொட்டு சுரேஷ், அழகிரியின் கண்ணில்படும்படி நடந்துகொண்டதால் வெகு சீக்கிரமாக அவருக்கு பிடித்தமானவராக மாறினார்.

அட்டாக் பாண்டி

எஸ்ஸார் கோபி, பி.எம்.மன்னன், ஜெயராம், பி.மூர்த்தி, கோ.தளபதி, குழந்தைவேலு, திருப்பத்தூர் இராம சிவராமன், இசக்கிமுத்து, மிசா பாண்டியன், கோபிநாதன், அட்டாக் பாண்டி, கவுஸ்பாட்சா, தங்கம் தென்னரசு, நெல்லை மாலைராஜா, கே.பி.ராமலிங்கம், முருகவேலு, ராமநாதபுரம் ஷேக் என பெரும் ஆதரவாளர் கூட்டத்துடன் அழகிரி இருந்த நிலையில், அவர்களையெல்லாம் மீறி தனி ஆளாக தன் சாமர்த்தியத்தால் அழகிரி மனதில் இடம் பிடித்து, ஒரு கட்டத்தில் அழகிரியின் மறு உருவமாக கட்சியினராலும், அதிகாரிகளாலும், அமைச்சர்களாலும் பார்க்கப்படும் வகையில் பொட்டு சுரேஷ் உயர்ந்தார். இந்த அபரிமிதமான வளர்ச்சி, அழகிரியுடன் ஆரம்பித்திலிருந்து பயணித்து வந்தவர்களுக்கும், வழக்கு, கைது, சிறை என்று கஷ்டங்களை எதிர்கொண்டவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்தது.

இன்னொரு பக்கம், அப்போது மதுரை மாவட்ட செயலாளராக இருந்த வழக்கறிஞர் வேலுச்சாமி மூலம் திமுகவில் இணைந்து இயங்கிய அட்டாக் பாண்டி அப்படியே அழகிரியின் ஆதரவாளராக மாறினார். 2003 -ஆம் ஆண்டில் தா.கிருஷ்ணன் கொலை சம்பவத்தால்  மதுரை டென்ஷனாக இருந்தபோது அழகிரி குடும்பத்துக்கும், துரை தயாநிதிக்கும் பாதுகாப்பாக இருந்தது அட்டாக் பாண்டியும் அவருடைய ஆதரவாளர்களும்தான். அதனால் அழகிரி மற்றும் குடும்பத்தினரின் மனதில் இடம் பிடித்தார். அடுத்ததாக, தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அட்டாக் பாண்டியை தொண்டரணி செயலாளர் பொறுப்பிலும் மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவராகவும் நியமித்து ஆச்சரியப்படுத்தினார் அழகிரி. இதனால் அட்டாக் பாண்டியின் அரசியல் கிராப் உயர்ந்தது.

 ஆனால், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் மட்டும் இருந்த பொட்டு சுரேஷ், வேறு எந்த பதவியை எதையும் எதிர்பார்க்காமல், அழகிரியின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அவரின் நிழலாக செயல்பட ஆரம்பித்து பொருளாதார ரீதியாக வளர்ந்து அதிகாரம் செலுத்தும் வகையில் செயல்பட்டார். இது அழகிரியின் ஆரம்பகால ஆதரவாளர்கள் பலருக்கும் தொடர்ந்து  எரிச்சலை ஏற்படுத்தினாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அட்டாக் பாண்டி மட்டும் அவ்வப்போது பொட்டுவுடன் உரசி வந்தார்.

அட்டாக் பாண்டி - பொட்டு சுரேஷ்

இதற்கிடையே அட்டாக் பாண்டியின் வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் பதவி திடீரென்று பறிக்கப்பட்டு அழகிரியை சந்திக்க தடை விதிக்கப்பட்டது, அதிகாரம் போனதும் பழைய வழக்குகளில் போலீஸ் நெருக்கடி கொடுத்தது. இதன் பின்னணியில் பொட்டு சுரேஷ் இருப்பதாக அட்டாக்கின் ஆதரவாளர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தார்கள்.

இதனிடையே   2011- ல் அதிமுக ஆட்சி வந்ததால் முன்பு போல அழகிரியின் ஆதரவாளர்களால் கெத்தாக மதுரையில் வலம் வரமுடியவில்லை. காரணம், முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அழகிரியின் ஆதரவாளர்கள் செய்யும் அட்ராசிட்டி குறித்து மதுரை பிரசாரத்தில் கடுமையாக பேசியிருந்தார். அதனால் மதுரை காவல் துறையினர் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தனர். பொட்டு சுரேஷ் மீதான பழைய வழக்குகள் தூசி தட்டப்பட்டு, தட்டி தூக்கப்பட்டார். ஒருகட்டத்தில் போலீஸ் கொடுத்த நெருக்கடியில் அதிமுகவுக்கு செல்லவும் பொட்டு சுரேஷ் தயாராகி வந்த நிலையில் சேர்த்துக்கொள்ள அதிமுக மறுத்துவிட்டது. இதனால் அடங்கி ஒடுங்கிய பொட்டு சுரேஷ், தன் அலுவலகம் உண்டு வீடு உண்டு என்று அமைதியாக இருந்து வந்தார்.

 இந்த நிலையில்தான்  2013 ஆம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடந்து முடிந்தது. மறுநாள் டிவிஎஸ் நகரில் உள்ள தன் வீட்டுக்கு காரில் சென்றபோது ஒரு கும்பலால் வழிமறித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார் பொட்டு சுரேஷ். அப்போது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் சிலர் சரணடைய தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர்." என்றனர்.

அதற்கு மேல் நடந்தது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, "அதைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி, 2015-ல் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி விசாரித்து வரும் இந்த வழக்கில் அட்டாக் பாண்டி தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பலமுறை ஜாமீன் கேட்டும் நீதிமன்றம் வழங்கவில்லை. இன்னொரு பக்கம் சிபிஐ விசாரித்து வந்த தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் அட்டாக் பாண்டி உள்ளிட்டவர்களை விடுதலை செய்திருந்த நிலையில், சிபிஐ மேல்முறையீடு செய்ததில் 2019-ல் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். இந்நிலையில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது" என்றனர்.

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
பொட்டு சுரேஷ் கொலை வழக்கை துரிதமாக நடத்த வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க திமுக-விலோ, அவரால் பயனடைந்தவர்களோ, உறவினர்களோ யாரும் முன் வரவில்லை. கிட்டத்தட்ட இந்த வழக்கு எங்கும் நகராமல் தூங்குகிறது.!

அட்டாக் பாண்டியும் உடல் நலமின்றி மருத்துவ சிகிச்சை எடுத்தபடி மதுரை சிறையில் இருந்துவரும் நிலையில், "உடல் நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் என் மருத்துவ செலவுக்காக  சொத்துகளை விற்க என் கணவருக்கு பரோல் அளிக்க வேண்டும்" என்று அட்டாக் பாண்டியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் சமீபத்தில் 10 நாட்கள் பரோலில் அட்டாக் பாண்டி  வந்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த வழக்கு குறித்து எந்தவொரு பரபரப்பும் சலசலப்பும் இல்லாத சூழல்தான் மதுரை திமுகவினரிடம் தற்போது உள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

போலி ஆவணங்கள்; போலி கையெழுத்து - ரூ.45 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள காந்திஜி சாலையில் பிரபல நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள... மேலும் பார்க்க

கீழக்கரை: சட்டவிரோத மது விற்பனை; தட்டிக்கேட்டவரைத் தாக்கிய கும்பல்; பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கு

சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைக் கேள்வி எழுப்பிய நபரைத் தாக்கியது மட்டுமின்றி, அவர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் கீழக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கீழக்கரை காவல் நிலையம்ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் பணமோசடி; 10 மாதங்களில் ஆயிரம் கோடி இழந்த மும்பை மக்கள்; பகீர் பின்னணி

மும்பையில் அடுத்தடுத்து சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது ... மேலும் பார்க்க

Dear Lottery - அபாயகர வலை; தேனி, திண்டுக்கல்லில் உழைக்கும் மக்களை அடிமையாக்கும் சட்டவிரோத நெட்வொர்க்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் துண்டுச்சீட்டு லாட்டரி விற்பனை படுஜோராக நடந்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அண்மையில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் லாட்டரி... மேலும் பார்க்க

பேஸ்புக்கில் அறிமுகம்... பாகிஸ்தான் பெண்ணிற்காக ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த இளைஞர் கைது..!

பாகிஸ்தான் எல்லையில் குஜராத் இருக்கிறது. இதனால் அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து குஜராத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கம். இதனால் கடற்பகுதியில் இந்திய கடற்படை கப்பல்கள் அதிக அளவில் ரோந்துப்பண... மேலும் பார்க்க

பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா... பொள்ளாச்சி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் செய்த அசிங்கம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்க... மேலும் பார்க்க