செய்திகள் :

கி.வீரமணி பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

post image

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 92-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | சட்டப்பேரவை டிச. 9-ல் கூடுகிறது! டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தீர்மானம்!

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

'தமிழினம் விழிப்புறவும் பகுத்தறிவால் மேன்மையுறவும் நாளும் தன் பரப்புரைத் தொண்டறத்தை மேற்கொண்டு வரும் பெரியாரின் பெருந்தொண்டர், தாய்க்கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

தமிழினத்தின் அரணாக விளங்கும் பெரியாரியக் கொள்கைகளை நாளும் சமுதாயத்தில் விதைத்திடும் ஆசிரியர் வாழிய பல்லாண்டு!' என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தப... மேலும் பார்க்க

தெலங்கானாவில் காவல் உதவி ஆய்வாளர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

தெலங்கானாவில் காவல் உதவி ஆய்வாளர் திங்கள்கிழமை காலை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், வசேது காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர்... மேலும் பார்க்க

என்ன நடக்கிறது? செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம்

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.என்ன... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல... மேலும் பார்க்க

விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து!! உதவி எண்கள்!

சென்னையில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததை அடுத்து, ... மேலும் பார்க்க