Bigg Boss: 'பிக்பாஸ், உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா?' - இந்தி பிக்பாஸில் கலக்கும் ...
கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்தவுடன், காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுவிழந்து மெதுவாக மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகா்ந்தது.
இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் உள்மாவட்டங்கள் நோக்கி நகா்ந்து டிச. 2-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!
இந்த நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.