செய்திகள் :

Relationship: மனைவியுடன் மனம் ஒத்த வாழ்க்கை; ஆனாலும் இன்னொரு பெண்ணிடமும் காதல் வயப்படுவது ஏன்?

post image

பார்ப்பதற்கு 'மேட் ஃபார் ஈச் அதர்' ஆகத் தெரிவார்கள். அருகில் சென்று பழகினால் 'ஆஹா, என்னவொரு அன்னியோன்யமான தம்பதி' என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு இருப்பார்கள். ஏதோவொரு கட்டத்தில், அந்த ஆண் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்பட்டிருக்கிறார் என்பது தெரியும்போது 'அந்த மனிதரா இப்படி' என்று ஆச்சரியப்பட்டுப் போவோம். மனைவியுடன் நிறைவான திருமண வாழ்க்கையில் இருந்தாலும் சில ஆண்கள் ஏன் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்கள்? விளக்கம் தருகிறார் உளவியல் ஆலோசகர் சீனிவாசன் செயராமன்.

Relationship

''மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும்போதே இன்னொரு பெண் மீது கணவருக்கு ஈர்ப்பு வருகிறது என்றால், அதற்கு முதல் மற்றும் முக்கியமான காரணம் தாம்பத்திய உறவில் ஆணுக்குத் திருப்திக் கிடைக்காததுதான். ஏன் திருப்தி கிடைப்பதில்லை என்று பார்த்தால், போர்ன் வீடியோக்களைப் பார்த்துவிட்டு அதில் நடந்ததெல்லாம் தனக்கும் நிகழ வேண்டுமென்று சில ஆண்கள் மனைவியிடம் எதிர்பார்ப்பார். மனைவி அதற்கு மறுக்கும்போது வெளியில் தேட ஆரம்பிப்பார்கள்.

சில குடும்பங்களில் 'இவளுக்கு இதெல்லாம் புரியாது' என்று மனைவியிடம் எதையும் பகிர்ந்துகொள்ள மாட்டார் கணவர். 'வீட்டைப் பார்த்துக்கொள்வது மட்டுமே தன் கடமை'யென்று இருப்பார் மனைவி. ஒரு காலகட்டத்தில் இந்த இருவருக்குமிடையில் பேச்சு வார்த்தை குறைந்துபோகும். ஸ்வீட் நத்திங் எதுவும் இருக்காது. விளைவு இடைவெளி அதிகமாகும். இது திருமணம் தாண்டிய உறவு தேடலிலும் முடியலாம்.

Relationship

திருமணத்துக்கு முன்னால் தனக்கு வரப்போகிற மனைவி இந்த நிறத்தில், இந்த உடல்வாகில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அந்தக் கனவு நிறைவேறாதபோது, அவனுடைய கனவில் கொஞ்சமே கொஞ்சம் ஒத்துப்போகிற பெண்ணைப் பார்த்தாலும் சலனமடைவான். அப்படியொரு பெண்ணை பார்க்கவில்லையென்றாலும், மனைவி சின்ன தவறு செய்துவிட்டாலும், 'நான் என்னுடைய விருப்பத்தையெலாம் தியாகம் செய்துவிட்டு உன்னைத் திருமணம் செய்தேனே' என்கிற அடிமன உணர்வு மேலெழுந்துவிடும். நன்றாக இருந்த தாம்பத்தியமும் திடீரென தள்ளாடுவதற்கு இந்த உணர்வும் ஒரு காரணம்.

பெரும்பாலான ஆண்களுக்குத் தன்னை மோட்டிவேட் செய்கிற பெண்களைப் பிடிக்கும். அப்படியொரு பெண்ணை வெளியில் சந்திக்கும்போது அவர்மீது ஈர்ப்பு வரலாம். அது ஒருதலைக்காதலாகவும் மாறலாம். இதேபோல, வேலையில் தனக்கு வழிகாட்டுகிற பெண்ணையும் சில ஆண்கள் நேசிக்கலாம். இவை பெரும்பாலும் குடும்பத்தைச் சிதைக்கிற அளவுக்குப் போகாது. நாமெல்லாருமே 'சிந்து பைரவி' படம் பார்த்திருப்போம். அதில் சிவகுமார் இனிமையான இல்லற வாழ்க்கையைத்தான் சுலக்‌ஷனாவுடன் அனுபவித்துக்கொண்டிருப்பார். ஆனால், தன்னுடைய துறை சார்ந்த அறிவுடன் இருக்கிற சுஹாசினியுடன் பழகியதும் அவர் மீது காதல் கொள்வார். இந்த வகை ஈர்ப்பு ஒரு நிறைவான தாம்பத்தியத்தைச் சற்று அசைத்துப் பார்க்கலாமே தவிர, ஒரு குடும்பத்தையே அழிக்கும் என்று சொல்ல முடியாது.

Relationship

சீக்கிரம் திருமணமான ஆண்களில் சிலர் 'மேரிட் லைஃப் ரொம்ப போரடிக்குதுப்பா' என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? இந்த உணர்வும், ஆணை வேறொரு துணையைத் தேட வைக்கும்.

சில மனைவிகள் தன்னுடைய அழகையும் பர்சனாலிட்டியையும் சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பார்கள். அழகான கண்கள் இருக்கும்; மை தீட்ட மாட்டார்கள். நீளமான விரல்கள் இருக்கும்; மெனிக்யூர் செய்து நெயில் பாலிஷ் போடுவதுபற்றிய பிரக்ஞை இல்லாமல் இருப்பார்கள். இந்த பிரசன்ட்டேஷன் சென்ஸ் உள்ள பெண்ணை சந்திக்கும்போது ஆண் அவரை ரசிக்கலாம். தன் மனைவி இப்படியே இல்லையே என்று யோசிக்கலாம்.

Relationship

இதுவரை நான் சொன்னதெல்லாம், ஆண் அவனை மீறிச் செய்கிற விஷயங்கள்தான். மனைவி தாண்டி இன்னொரு பெண் மீது ஈர்ப்பு வந்தாலும் குடும்பம், குழந்தைகள், என் மனைவி எனக்காக எவ்வளவு செய்திருக்கிறாள் என்பதுபோன்ற எண்ணங்கள், அவனை பெரும்பாலும் தவறு செய்யவிடாது. ஆனால், ஆணுக்கு 'பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸார்டர்' இருந்தால், அவன் தடம் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் த்ரிலுக்காக புதுப்புது விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பார்கள். பெண்கள் விஷயத்தையும் சேர்த்துத்தான். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், இவர்களுக்கு அன்பான குடும்பம் இருக்கும். ஆனால், ரிலேஷன்ஷிப் ஆப்பில் வேறொரு பெண்ணுக்கு ரூட் போட்டுக்கொண்டிருப்பார்கள். இவர்களால் உறவைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. இந்தப் பிரச்னை இருக்கிற சில ஆண்களுக்கு தனக்கு இப்படியொரு பண்பு இருப்பது தெரியும். அப்படிப்பட்டவர்கள், ஒருகட்டத்தில் மனைவிக்குத் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சி செய்வார்கள். இதுவே நோயாக இருந்தால், அந்த ஆண்கள் இன்னொரு பெண், வேறொரு பெண் என்று முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அதே நேரம் மனைவியிடமும் 'மானே தேனே' என்று காதல் பொழிந்துகொண்டிருப்பார்கள். வெளிநாடுகளில் 'பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸார்டரை காரணமாகக் குறிப்பிட்டு விவாகரத்துகூட செய்வார்கள்'' என்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

மணப்பெண்ணுக்கு மாலையிட்ட மாப்பிள்ளை... கடைசி நேரத்தில் தெரிந்த உண்மை.. நின்று போன திருமணம்!

உத்தரப்பிரதேசத்தில் மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம் வாங்கும் இன்ஜினியர் மாப்பிள்ளையை மணமகள் வேண்டாம் என்று கூறி திருமணத்தைப் பாதியிலேயே நிறுத்திய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.உத்தரப்பிரதேசத்தின் ஃபருகா... மேலும் பார்க்க

ரீல்ஸ் வெளியிடுவதை தடுத்த கணவர்... விவாகரத்து செய்த மனைவி..!

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாவில் ரீல்ஸ் எனப்படும் வீடியோக்கள் வெளியிடப்படுவது அதிகமாக நடந்து வருகிறது. இந்த சோசியல் மீடியா வீடியோக்கள் சில நேரங்களில் சொந்த வாழ்க்கையில் சிக்கலை ஏற்படு... மேலும் பார்க்க