Maharashtra: முதல்வர் பதவி விவகாரம்: "பிரதமரின் முடிவை ஏற்பேன்" - சரணடைந்த ஷிண்ட...
ரீல்ஸ் வெளியிடுவதை தடுத்த கணவர்... விவாகரத்து செய்த மனைவி..!
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாவில் ரீல்ஸ் எனப்படும் வீடியோக்கள் வெளியிடப்படுவது அதிகமாக நடந்து வருகிறது. இந்த சோசியல் மீடியா வீடியோக்கள் சில நேரங்களில் சொந்த வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நர்சரி ஸ்கூல் ஒன்றில் வேலை செய்து வருபவர் சஞ்சனா(30). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ப்ளேஸ்கூலுக்கு சில மணி நேரம் சென்று வந்த பிறகு வீட்டில் இருக்கும் போது மொபைல் போன் மூலம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் ரீல்ஸ் வெளியிட ஆரம்பித்தார்.
அவரது வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் மாதம் அவருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வருமானம் கிடைத்தது. அவருக்கு மற்ற ரீல்ஸ் தயாரிப்பாளர்களுடன் நட்பு ஏற்பட்டது. அதோடு சோசியல் மீடியா நண்பர்களுடனும் நட்பு ஏற்பட்டது. அதில் சிலர் சஞ்சனாவிற்கு போன் செய்து பேசினர். சிலர் வீட்டிற்கும் வர ஆரம்பித்தனர்.
ஆனால் இது சஞ்சனாவின் கணவருக்கு பிடிக்கவில்லை. இதனால் சோசியல் மீடியாவில் வீடியோ போடுவதை கைவிடும்படி கணவர் கேட்டுக்கொண்டார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில் கணவனை விவாகரத்து செய்ய சஞ்சனா முடிவு செய்து கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
கோர்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது சஞ்சனா ஆஜராகி, தனது புகழ் அதிகரித்து வருவது மற்றும் அதிக அளவில் பணம் கிடைப்பதால் தனது கணவருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. எனவே ரீல்ஸ் வெளியிடுவதை நிறுத்தும்படி கேட்டார். ஆனால் முடியாது என்று கூறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். இது குறித்து குடும்ப நீதிமன்ற வழக்கறிஞர் சலீல் கூறுகையில், ''இன்றைக்கு 60 சதவீத திருமண உறவிற்கு 60 சதவீதம் வில்லனாக இருப்பது சோசியல் மீடியாக்கள்தான். இரண்டு பேரில் ஒருவர் சோசியல் மீடியாவிற்கு அடிமையாக இருக்கும் போது மற்றொருவர் தன்னை கவனிக்கவில்லை என்று நினைக்கிறார். இது திருமண உறவிற்கு பிரச்னையாக அமைகிறது'' என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...