செய்திகள் :

தஞ்சை: 'கடலா..? வயலா..?' - தொடர் மழையால் மூழ்கிய நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்; காரணமென்ன?

post image

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில் நெல் பயிர், வெற்றிலை சாகுபடி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.

அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, தலையாமங்கலம், நெய்வாசல் தென்பாதி உள்ளிட்ட பல பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

வீடுகளைச் சூழ்ந்த மழை நீர்

சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. வயல்களில் எங்கும் சூந்துள்ள மழை நீரால் வயல் கடல் போல் காட்சியளிக்கின்றன. வயல் ஓரங்களில் வடிகால்கள் முறையாகத் தூர் வாராததால் தண்ணீர் வடிய வழியின்றி வயல்களில் தேங்கியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் பேசினோம். "தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல் சுமார் 500 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அம்மாப்பேட்டையில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாதிப்படைந்தனர்.

இதே போல் ஒரத்தநாடு பகுதியில் தலையாமங்கலம், குலமங்கலம், நெய்வாசல், தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை நீர் வடிகின்ற வடிகால்கள் முறையாகத் தூர் வாராததால் மழை நீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதற்கு இதுவே காரணம். மழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

வயலில் தேங்கி நிற்கும் மழை நீர்

பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை, ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலைப் பயிரான வெற்றிலை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட வெற்றிலைகள் அழுகிவிட்டன. இதையறிந்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குச் சுமார் 800 விசைப்படகுகள், 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீன் பிடி தொழில் செய்கின்றனர். மழை காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. படகுகளைக் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

”48 கிராமங்கள்; 48 விவசாயிகள்; 48 பாரம்பர்ய நெல் ரகங்கள்” - உதயநிதி பிறந்தநாளில் நடிகர் அசத்தல்!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் திரைப்பட நடிகர் துரை சுதாகர். இவர் சமீபத்தில் வெளியான நந்தன், களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தி.மு.கவைச் சேர்ந்த இவர் சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டு ... மேலும் பார்க்க

வேளாண்மை சந்தையில் களமிறங்கும் ஆளில்லா வானூர்திகள்! - சிறப்பம்சம் என்ன?

வேளாண்மை உற்பத்தியாளர்களுக்கு உதவுவதற்காகவும், மனிதர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்காகவும் அமெரிக்க நிறுவனங்கள் ட்ரோன்களை விட பெரிய தானியங்கி விமானங்களை உருவாக்கி வருகின்றன.இந்த வக... மேலும் பார்க்க

`இது புதுசா இருக்கே!' - பெங்களூரில் நிலக்கடலை திருவிழா புகைப்படத் தொகுப்பு | Photo Album

நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை ... மேலும் பார்க்க

ஊட்டி: கிலோ 20 ரூபாய் வரை போகும் முட்டைகோஸ்... அறுவடையில் விவசாயிகள் மும்முரம்!

ஊட்டியில் முட்டைகோஸ் அறுவடை ஊட்டியில் முட்டைகோஸ் அறுவடை ஊட்டியில் முட்டைகோஸ் அறுவடை ஊட்டியில் முட்டைகோஸ் அறுவடை ஊட்டியில் முட்டைகோஸ் அறுவடை ஊட்டியில் முட்டைகோஸ் அறுவடை ஊட்டியில் முட்டைகோஸ் அறுவடை ஊட்ட... மேலும் பார்க்க

Diamond: 7.44 காரட் வைரத்தை தோண்டி எடுத்த விவசாயி... தொடர்ந்து தேடல்; அடித்தது ஜாக்பாட்!

மத்திய பிரதேசத்தில் உள்ள சுரங்கத்திலிருந்து விவசாயி ஒருவர் 7.44 காரட் வைரத்தைக் கண்டுபிடித்து எடுத்துள்ளார். இதுவரை விவசாயியாக இருந்து வந்த திலீப் மிஸ்ட்ரி, இதன் மூலம் ஒரே நாளில் பணக்காரராக மாறி இருக்... மேலும் பார்க்க

கோமாளிக் கூத்துகளை ஒழித்துக் கட்டுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை’ என்று நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலையில் மூழ்குவது வாடிக்கையாகவே உள்ளது.மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீ... மேலும் பார்க்க