செய்திகள் :

கோமாளிக் கூத்துகளை ஒழித்துக் கட்டுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை’ என்று நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலையில் மூழ்குவது வாடிக்கையாகவே உள்ளது.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லை. இதனால், திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன. அவை முறையாகப் பாதுகாக்கப்படாததால், மழையில் நனைந்து பாழாவது, அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்கிறது இந்த அவலம். கடந்த மே மாதத்தில் பெய்த கோடை மழையின்போதுகூட, பல மாவட்டங்களில் நெல் மூட்டைகள் வீணாகின. இதோ... இந்த போகத்துக்கான அறுவடை ஆரம்பித்துவிட்டது- மழையும்தான்.

‘‘கடந்த மூன்று ஆண்டு காலமாக, நெல் மற்றும் இதர தானியங்கள் மழையில் நனைவது குறித்து பல அறிக்கைகள் வெளியிட்டும், இந்தத் தி.மு.க ஆட்சியில் தீர்வு கிடைக்கவில்லை’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த மே மாதத்தில் அறிக்கையை வெளியிட்டார்.

‘‘நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாமல் தவிர்க்கின்றனர். இதனால், திறந்தவெளியில் கிடக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைகின்றன. உரிய கிடங்குகள் இல்லை. இந்த அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’’ என்று 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் அன்றைய தி.மு.க உறுப்பினரும், இன்றைய தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா.

ஆக, ஆட்சிகள் மாறும்போதெல்லாம் லாவணி பாடும் ஆள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்... காட்சிகள் மட்டும் அப்படியே தொடர்கின்றன.

‘நான்தான் விவசாயி’ என்று பச்சைத் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு முதல்வராக வலம் வந்தார் நேற்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘நானும் டெல்டாகாரன்தான்’ என்று பச்சைத் துண்டோடு வலம் வருகிறார், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தலைப்பாகைக் கட்டிக்கொள்வது, மாட்டுவண்டியில் பயணிப்பது, கதிர்முற்றி நிற்கும் வயலில் விவசாயிகளின் தோளில் கைபோட்டு போஸ் கொடுப்பது, பச்சைத் துண்டு போடுவது என இந்தக் கோமாளிக் கூத்துகளால், விவசாயிகளுக்கும் சரி... நாட்டுக்கும் சரி... ஒரு நெல்முனையளவுகூட நன்மை கிடைக்கப்போவதில்லை. இவற்றையெல்லாம் விட்டொழித்துவிட்டு, ஆக்கபூர்வமான பணிகளில் கவனத்தைத் திருப்புவதுதான், ஆட்சியாளர்களின் செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.

இப்போதைய வாய்ப்பு... முதல்வர் ஸ்டாலின் கையில். கவனத்தைத் திருப்புவார் என்று நம்புவோம்!

- ஆசிரியர்

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஏ.பால்ராஜ்,க.மல்லபுரம்,தஞ்சாவூர். 95663 61249 தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, வாசனை சீரகச் சம்பா நெல் மற்றும் அரிசி.மிக்கேல்,தூத்துக்குடி.90928 27751 பிரண்டை, சோற்றுக் கற்றாழை.எம்.விஜய... மேலும் பார்க்க

தண்டோரா

தேனீ வளர்ப்புசிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் நவம்பர் 15-ம் தேதி ‘பால் மதிப்புக்கூட்டல்’, 16-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’, 21-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 22-ம்... மேலும் பார்க்க

அக்ரி டூரிசம்: மரம் நடுதல் டு கால்நடைகள்... மதுரை வந்த சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம் | Photo Album

மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ரி டூரிசம்மதுரை அக்ர... மேலும் பார்க்க

Ooty Carrot: உச்சம் தொட்ட ஊட்டி கேரட்; கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை!

இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் நீலகிரி முக்கிய இடத்தில் இருக்கிறது. இங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளை நாட்டின் பல்வ... மேலும் பார்க்க

நீலகிரி: புத்துார்வயலில் பழங்குடியினர் கொண்டாடிய 'புத்தரி' அறுவடை திருவிழா! | Photo Story

காட்டு நாயக்கர், குரும்பர், பனியர், இருளர் பழங்குடிகளுடன் மவுண்டானா செட்டி சமூகத்தினரும் இணைந்து, ஐப்பசி முதல் வாரத்தில் விரதமிருந்து, 'புத்தரி' அறுவடைத் திருவிழாவுக்காக தயாராகின்றனர்.திருவிழா நாளன்று... மேலும் பார்க்க

பசுமை சந்தை

பசுமை சந்தைபசுமை சந்தை மேலும் பார்க்க