அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
தண்டோரா
தேனீ வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் நவம்பர் 15-ம் தேதி ‘பால் மதிப்புக்கூட்டல்’, 16-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’, 21-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 22-ம் தேதி, ‘இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு’ ஆகிய பயிற்சி நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.
சிறுதானிய நூடுல்ஸ் தயாரிப்பு
சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையத்தில் நவம்பர் 14 மற்றும் 21-ம் தேதிகளில் ‘சிறுதானியங்களில் நூடுல்ஸ், சத்து மாவு, சூப் மிக்ஸ், பிஸ்கெட் தயாரிப்பு’ சம்பந்தமான பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, செல்போன்: 94863 92006
விரால் மீன் வளர்ப்பு
தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நவம்பர் 13-ம் தேதி ‘விரால் மீன் வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. மீன் குஞ்சுகள் இருப்பு மேலாண்மை முறைகள், தீவனம் அளித்தல், மீன்களைச் சந்தைப்படுத்துதல்... உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். கட்டணம் ரூ.300.
தொடர்புக்கு, மீன் வளர்ப்புத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி.
செல்போன்: 80722 08079.