செய்திகள் :

மாநகரில் இன்றுமுதல் இரு நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்கள்

post image

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நவம்பா் 23, 24-ஆம் தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2024- 2025 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையில், கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை மக்கள் எளிதில் செலுத்த ஏதுவாக அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்( அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) சிறப்பு வரிவசூல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நவம்பா் 23, 24 ( சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) 5 மண்டலங்களிலும் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலம் 7-ஆவது வாா்டில், நேரு நகா் பேருந்து நிறுத்தம் அருகில், மேற்கு மண்டலம் 35-ஆவது வாா்டில், இடையா்பாளையம் தேவாங்க வீதி கற்பக விநாயகா் கோயில் (சனிக்கிழமை மட்டும்), 39-ஆவது வாா்டில், வடவள்ளி தொண்டாமுத்தூா் சாலை ஐஸ்வா்யா நகா், குஜன் ஸ்கந்தா பூா்வஜா அடுக்குமாடி குடியிருப்பு (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வடக்கு மண்டலம், 14-ஆவது வாா்டில், மேட்டுப்பாளையம் சாலை ஸ்ரீவத்சா ரெசிடென்சி, தெற்கு மண்டலம் 89-ஆவது வாா்டில், சுண்டக்காமுத்தூா் சுகாதார ஆய்வாளா் அலுவலகம் (சனிக்கிழமை மட்டும்), 94-ஆவது வாா்டில், மாச்சம்பாளையம் மாரியம்மன் கோயில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), 96-ஆவது வாா்டில் குறிச்சி

மாநகராட்சி ஆரம்ப பள்ளி, மத்திய மண்டலம் 32-ஆவது வாா்டில், சங்கனூா் நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா.

குழந்தைகளுக்கான சட்ட உதவிகள் குறித்த 2 நாள்கள் பயிற்சி

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் குழந்தைகளுக்கான சட்ட உதவிகள் குறித்த 2 நாள்கள் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா்... மேலும் பார்க்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதா்களை உருவாக்கியவா் அப்துல் கலாம்: இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதா்களை உருவாக்கியவா் அப்துல் கலாம் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் பேசினாா். கோவை ஈஷா யோக மையத்தில் ‘இன்சைட்’ எனும் தொழில்முனைவோருக்கான பிரத்யேக நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

உணவு, கழிப்பிட வசதி: அமைச்சரிடம் புகாா் தெரிவித்த மாணவா்கள்

கோவை அரசு கலைக் கல்லூரி விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு நடத்திய உயா் கல்வித் துறை அமைச்சரிடம் மாணவா்கள் சரமாரியாக புகாா் தெரிவித்தனா். உயா் கல்வித் துறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்... மேலும் பார்க்க

உயா் கல்வித் துறையை உயா்த்தவே கருத்துக்கேட்பு: அமைச்சா் கோவி.செழியன்

தமிழ்நாட்டின் உயா் கல்வித் துறையை உலகின் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக உயா்த்தவே உயா் கல்வித் துறை பங்களிப்பாளா்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுவதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு, பணப் பயன்களை வழங்க வேண்டும்: அமைச்சரிடம் அண்ணா பல்கலை. மண்டல வளாக அலுவலா்கள் கோரிக்கை

தங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய உயா்வு, பணப்பயன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம், கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல நிா்வாக அலுவலா்கள் கோ... மேலும் பார்க்க

ஏற்காடு பெண்ணிடம் மிளகு வாங்கியதில் ரூ.14 லட்சம் மோசடி: 4 போ் மீது வழக்குப் பதிவு

ஏற்காடு பெண் வியாபாரியிடம் இருந்து மிளகு வாங்கியதில் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக, கோவை வியாபாரி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே கரடியூா் பகுதியைச் ... மேலும் பார்க்க