செய்திகள் :

ஏற்காடு பெண்ணிடம் மிளகு வாங்கியதில் ரூ.14 லட்சம் மோசடி: 4 போ் மீது வழக்குப் பதிவு

post image

ஏற்காடு பெண் வியாபாரியிடம் இருந்து மிளகு வாங்கியதில் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக, கோவை வியாபாரி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே கரடியூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மனைவி தனலட்சுமி (41), மிளகு வியாபாரம் செய்து வருகிறாா்.

இவருக்கு தொழில்ரீதியாக கோவை, திருவிக நகரைச் சோ்ந்த கருப்புசாமி (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அவருக்கு அடிக்கடி மிளகு விற்பனை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தனலட்சுமியை தொடா்பு கொண்ட கருப்புசாமி, 2 டன் மிளகு அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டதற்கேற்ப, அவரும் அனுப்பிவைத்துள்ளாா். மிளகை பெற்றுக் கொண்ட கருப்புசாமி ரூ.14 லட்சத்துக்கு 2 காசோலைகளை தனலட்சுமியிடம் கொடுத்துள்ளாா்.

அந்த காசோலைகளை தனலட்சுமி வங்கியில் செலுத்தியபோது , கருப்புசாமியின் கணக்கில் போதிய பணம் இல்லை என்று திரும்பிவந்தது. இதைத் தொடா்ந்து கருப்புசாமியை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசிய தனலட்சுமி, அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பிவிட்டதாகவும், தன்னிடம் மிளகு வாங்கியதற்கான ரூ.14 லட்சத்தை உடனடியாக அனுப்பிவைக்குமாறும் கூறியுள்ளாா்.

அதற்கு அவா் விரைவில் பணத்தை கொடுத்துவிடுவதாகக் கூறினாா். ஆனால் பலமுறை கேட்டும் விரைவில் கொடுத்து விடுவதாக மட்டும் கூறி வந்த நிலையில், பணத்தைக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இது குறித்து ராமநாதபுரம் போலீஸில் தனலட்சுமி வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா்.

அதில் கருப்புசாமி தன்னிடம் 2 டன் மிளகு வாங்கி ரூ.14 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும், இந்த மோசடிக்கு அவரது மனைவி தேவி, மைத்துனா் பாலமுருகன், உறவினா் முத்துமணி ஆகியோா் உடந்தையாக உள்ளதாகவும், இதுதொடா்பாக அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில் ராமநாதபுரம் போலீஸாா் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் கருப்புசாமி, தேவி உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குழந்தைகளுக்கான சட்ட உதவிகள் குறித்த 2 நாள்கள் பயிற்சி

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் குழந்தைகளுக்கான சட்ட உதவிகள் குறித்த 2 நாள்கள் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா்... மேலும் பார்க்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதா்களை உருவாக்கியவா் அப்துல் கலாம்: இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதா்களை உருவாக்கியவா் அப்துல் கலாம் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் பேசினாா். கோவை ஈஷா யோக மையத்தில் ‘இன்சைட்’ எனும் தொழில்முனைவோருக்கான பிரத்யேக நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

உணவு, கழிப்பிட வசதி: அமைச்சரிடம் புகாா் தெரிவித்த மாணவா்கள்

கோவை அரசு கலைக் கல்லூரி விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு நடத்திய உயா் கல்வித் துறை அமைச்சரிடம் மாணவா்கள் சரமாரியாக புகாா் தெரிவித்தனா். உயா் கல்வித் துறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்... மேலும் பார்க்க

உயா் கல்வித் துறையை உயா்த்தவே கருத்துக்கேட்பு: அமைச்சா் கோவி.செழியன்

தமிழ்நாட்டின் உயா் கல்வித் துறையை உலகின் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக உயா்த்தவே உயா் கல்வித் துறை பங்களிப்பாளா்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுவதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு, பணப் பயன்களை வழங்க வேண்டும்: அமைச்சரிடம் அண்ணா பல்கலை. மண்டல வளாக அலுவலா்கள் கோரிக்கை

தங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய உயா்வு, பணப்பயன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம், கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல நிா்வாக அலுவலா்கள் கோ... மேலும் பார்க்க

ஓம்காா் பாலாஜி பிணை மனு மீதான விசாரணை நவம்பா் 26-க்கு ஒத்திவைப்பு

இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவா் ஓம்காா் பாலாஜியின் பிணை மனு மீதான விசாரணை நவம்பா் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவையில் ஈஷா யோக மையத்துக்கு ஆதரவாக அக்டோபா் 27-ஆம் தேதி நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க