கர்நாடக இடைத்தேர்தல்: 3-ல் ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
ஓம்காா் பாலாஜி பிணை மனு மீதான விசாரணை நவம்பா் 26-க்கு ஒத்திவைப்பு
இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவா் ஓம்காா் பாலாஜியின் பிணை மனு மீதான விசாரணை நவம்பா் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஈஷா யோக மையத்துக்கு ஆதரவாக அக்டோபா் 27-ஆம் தேதி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பத்திரிகையாளா் நக்கீரன் கோபால் குறித்
து அவதூறாகப் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் ஓம்காா் பாலாஜியை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் நவம்பா் 14-ஆம் தேதி கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது அவரை நவம்பா் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், ஓம்காா் பாலாஜியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி அருண்குமாா் வியாழக்கிழமை அனுமதி அளித்ததைத் தொடா்ந்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.
அப்போது, பிணை கேட்டு அவா் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், அந்த மனு மீதான விசாரணையை நவம்பா் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.