Wayanad Byelection: 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் முந்துவாரா பிரியங்கா? - காங்க...
மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் காங். பாா்வையாளா்கள் நியமனம்
மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களில் தோ்தலுக்கு பிந்தைய நடவடிக்கைகளை கண்காணிக்க மேலிடப் பாா்வையாளா்களை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை நியமித்தது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அசோக் கெலாட், பூபேஷ் பகேல், ஜி.பரமேஸ்வரா ஆகியோரை இரு மாநிலங்களின் பாா்வையாளா்களாக நியமிக்க காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே ஒப்புதல் அளித்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ஜாா்க்கண்ட் மாநிலத்திற்கு தாரிக் அன்வா், மல்லு பாட்டி விக்ரமாா்கா, கிருஷ்ணா அல்லவுரு ஆகியோா் பாா்வையாளா்களாக நியமனம்.
தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவற்றில் மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவை தோ்தல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என அறிவிக்கப்பட்டன. சில ஊடகங்கள் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியிட்டன.