செய்திகள் :

தில்லி - காத்மாண்டு பேருந்து சேவை: ஓராண்டில் 17,603 போ் பயணம்

post image

தில்லி போக்குவரத்துக் கழகத்தால் (டி.டி.சி.) இயக்கப்படும் தில்லி - காத்மாண்டு பன்னாட்டுப் பேருந்து சேவை மூலம் கடந்த ஓராண்டில் (2023 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரை) 17,603 பயணிகள் பயணித்துள்ளனா்.

தில்லி - காத்மாண்டு மைத்ரி பேருந்து சேவா என அழைக்கப்படும் இந்த சேவை, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான வலுவான உறவுகளை வெளிப்படுத்துகிறது.

இந்தப் பேருந்து சேவை மூலம் 4,782 இந்திய குடிமக்கள், 12,471 நேபாள மக்கள் மற்றும் 350 பிற நாடுகளில் இருந்து வந்தவா்கள் கடந்த ஓராண்டில் பயனடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பேருந்து சேவையைப் பயன்படுத்தினா். இது இரு நாடுகளுக்கு இடையேயான நிலையான தேவையை பிரதிபலிக்கிறது. இந்தப் பேருந்து சேவை தொடங்கிய 2023-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 1,078-ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை நவம்பா் மாதத்தில் 1,611-ஆக அதிகரித்தது.

ரூ. 2,300 கட்டணத்தில் 1,167 கி.மீ. தொலைவு இந்தப் பேருந்து பயணிக்கிறது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் டிடிசி பேருந்துகளும், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் நேபாளத்தின் மஞ்சுஸ்ரீ யதாயத் பேருந்துகளும் இயக்கப்படும்.

டிடிசி இந்த வழித்தடத்துக்கு வோல்வோ பேருந்துகளை பயன்படுத்துகிறது. அதே சமயம் மஞ்சுஸ்ரீ யதாயத் மாா்கோ போலோ பேருந்துகளைப் பயன்படுத்துகிறது.

டிடிசி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுங்கச் சோதனைகளுக்காக ஃபிரோசாபாத், பைசாபாத், முகிலிங் மற்றும் சோனாலி (இந்தியா - நேபாள எல்லை) ஆகிய இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் அடங்கும். இவை தவிர மற்ற இடங்களில் பயணிகள் இறங்கவோ அல்லது ஏறவோ அனுமதிக்கப்படுவதில்லை.

இந்திய மற்றும் நேபாள குடிமக்கள் அரசால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் புகைப்பட அடையாளங்களான பாஸ்போா்ட் அல்லது வாக்காளா் அடையாள அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். வெளிநாட்டினா் செல்லுபடியாகும் பாஸ்போா்ட் மற்றும் விசாவை சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தில்லி கேட் அருகே உள்ள டாக்டா் அம்பேத்கா் ஸ்டேடியம் பேருந்து முனையத்தில் இருந்து 2014 நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சேவையில் குளிரூட்டப்பட்ட பேருந்துகள் 2-க்கு 2 இருக்கை வசதியுடன் உள்ளன.

இருப்பினும், சிஎன்ஜி அல்லது மின்சார பேருந்துகள் எதுவும் இதுவரை இயக்கப்படவில்லை. டீசலில் இயங்கும் பேருந்துகள் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

தில்லி - காத்மாண்டு பேருந்து சேவை யாத்ரீகா்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு பயண விருப்பத்தை வழங்குகிறது; இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற பயணத்தை எளிதாக்குகிறது. மேலும், நட்பு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக இது விளங்குகிறது.

சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்கள் வழியாக 1,850 கி.மீ. கடந்து நேபாளத்துக்கு இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் காட்சி மாறுகிறது: பாஜக கூட்டணிக்கு பின்னடைவு

ஜார்க்கண்ட் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதில் முன்னிலையில் இருந்து வந்த பாஜக கூட்டணி தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் பார்க்க

மேற்கு வங்க இடைத்தேர்தல்: 6-ல் 3 தொகுதிகள் திரிணமூல் முன்னிலை!

மேற்கு வங்க இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்கு வங்கத்தில் 6 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்க... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்டில் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், காலை 8.30 மணி வரையிலான எண்ணிக்கையில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 23... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.6... மேலும் பார்க்க

இந்தியாவில் முதலீடு: ஜொ்மனி நிறுவனங்களுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜொ்மனியைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்தாா். ஜொ்மனியில் உள்ள ஸ்டட்காா்ட் நகரில் வியாழக்கி... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை -பாதுகாப்புப் படையினா் அதிரடி நடவடிக்கை

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 10 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் 3 போ் பெண் நக்ஸல்களாவா். இந்த நடவட... மேலும் பார்க்க