செய்திகள் :

இந்தியாவில் முதலீடு: ஜொ்மனி நிறுவனங்களுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு

post image

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜொ்மனியைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்தாா்.

ஜொ்மனியில் உள்ள ஸ்டட்காா்ட் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற உச்சிமாநாட்டில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், ‘ஜொ்மனியின் விநியோகச் சங்கிலியில் இந்தியாவை இணைக்க வேண்டியது அவசியமாகும். இந்தியா தொடா்ந்து 6 முதல் 8 சதவீத பொருளாதார வளா்ச்சி அடைந்து வருகிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த வளா்ச்சி தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் 1,800-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த இளைஞா்களை இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவின் நிதிநிலை வலுவாக உள்ளன. .

பிரதமா் மோடி அரசு, திறமையான மற்றும் பயனுள்ள நிா்வாகத்தை வழங்கும் அதே வேளையில், தேவையற்ற அரசாங்க தலையீடுகளை குறைக்கும் கொள்கையை பின்பற்றுகிறது. அதன்படி, 1,500 காலாவதியான சட்டங்களை ரத்து செய்ததுடன், 40,000 தேவையற்ற இணக்க விதிகளும் நீக்கப்பட்டன.

இந்தியாவின் எண்ம தனிநபா் தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தொலைத்தொடா்பு சட்டம் போன்ற புதிய சட்டங்கள் இன்றைய எண்ம பொருளாதாரத்திற்கு வெளிப்படையான கட்டமைப்பை வழங்குகின்றன.

பொருளாதார வளா்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் புதுமையான கொள்கைகள் ஆகிய மூன்றும் உலகளாவிய வணிகத்துக்குச் சிறந்த நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது என்றாா்.

வாக்குச் சீட்டு முறை கோரிய மனு தள்ளுபடி உச்சநீதிமன்றம்

தோ்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ... மேலும் பார்க்க

6 மாநிலங்களவை இடங்களுக்கு டிச.20-இல் இடைத்தோ்தல்

ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு டிசம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ... மேலும் பார்க்க

பெண் யூ-டியூபர் குத்திக்கொலை! சடலத்துடன் தங்கியிருந்த கொலையாளி!

பெங்களூருவில் பெண் யூ-டியூபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அஸ்ஸாமைச் சேர்ந்த மாயா கோகோய் என்ற பிரபல ப... மேலும் பார்க்க

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் படகு! 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டுப் படகில் இருந்து 6,000 கிலோவுக்கும் அதிகமாக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டு மீன்பிடி படகில் இருந்து 6,016 கில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 40 யானைகள், 5 சிறுத்தைகள் பலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 40 யானைகள், 5 சிறுத்தைகள் மற்றும் 200 வனவிலங்குகள் பலியானதாக இன்று மாநில சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுசூழ... மேலும் பார்க்க

பின்வாங்கும் சர்வதேச முதலீட்டாளர்கள்: சட்ட, நிதி நெருக்கடியில் அதானி குழுமம்!

மும்பை: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாக அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு காரணமாக சர்வதேச முதலீடுகள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க