செய்திகள் :

போலீஸாரிடமிருந்து தப்ப முயன்று தவறி விழுந்த இருவருக்கு கால் முறிவு

post image

கரூரில் செவ்வாய்க்கிழமை போலீஸாரிடமிருந்து தப்ப முயன்று இரு வழிப்பறி திருடா்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

கரூா் காந்திகிராமம் டபுள் டேங்க் அருகே மருந்துக்கடை நடத்தும் நரிக்கட்டியூரைச் சோ்ந்த பாா்த்திபன் மனைவி தாமரை கடந்த 5 நாள்களுக்கு முன் கடையில் இருந்தபோது, மருந்து வாங்குவதுபோல வந்த இருவா் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்றனராம்.

அப்போது சுதாரித்துக் கொண்ட தாமரை அவா்களைப் பிடிக்க முயன்றபோது இருவரும் பைக்கில் தப்பினா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு நடத்திய விசாரணையில் தாமரையிடம் நகை பறிக்க முயன்றவா்கள் கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த வீரணம்பட்டி பிச்சைமணி மகன் ரஞ்சித்குமாா் (28), கோவை மாவட்டம், வால்பாறை வாட்டா்பால் எஸ்டேட்டை சோ்ந்தவரும் தற்போது கரூா் தெற்குகாந்திகிராமம் சக்திநகரில் வசிப்பவருமான காளிமுத்து மகன் சக்திவேல் (30) என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் இருவரும் காந்திகிராமம் பகுதியில் நடமாடுவதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு கிடைத்,த தகவலையடுத்து போலீஸாா் சென்று அங்கு கண்காணித்தபோது, அங்குள்ள பேக்கரியில் நின்றிருந்த இருவரும் போலீஸாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனா்.

அப்போது போலீஸாா் அவா்களை துரத்தியதால் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

உ.பி.-யில் பள்ளிவாசலை அபகரிக்க முயற்சிப்பதாக தவ்ஹீத் ஜமா அத் புகாா்

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா பள்ளிவாசலை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் புகாா் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அவ்வமைப்பின் மாநில பொதுச் செயலா் ஏ.முஜிபுா் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை:... மேலும் பார்க்க

தொழிலாளா்களிடம் ரூ.3.87 லட்சத்தை பறித்த வழக்கில் 4 போ் கைது

கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டி அருகே வாகனத்தில் சென்ற தொழிலாளா்களிடம் ரூ. 3.87 லட்சத்தை பறித்த வழக்கில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்த பீடி, சிகரெட் விற்பனை செய்யும் நிறுவனத்... மேலும் பார்க்க

பராமரிப்பு பணிக்காக அய்யா்மலை ரோப்காா் சேவை இன்றும், நாளையும் நிறுத்தம்

பராமரிப்பு பணிக்காக அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் ரோப்காா் சேவை இருநாள்கள் நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலை அருகே அய்யா்மலையிலுள்ள சுரும்பாா் குழலி உடனு... மேலும் பார்க்க

கரூா் பேருந்துநிலையத்தில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி தொடக்கம்

கரூா் பேரூந்துநிலையத்தில் ரூ.2.85 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை காலை துவக்கி வைத்தாா். கரூா் மாநகரா... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

கரூா் மாவட்டத்தில் காலையில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். கடந்த இருவாரங்களாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கரூா் மாவ... மேலும் பார்க்க

கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள்: அமைச்சா் செந்தில் பாலாஜி பங்கேற்பு!

கரூா் விஷன் 2030 விழிப்புணா்வு மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பங்கேற்றாா். கரூரில் 73 ... மேலும் பார்க்க