பயிா் பாதிப்புக்கு உரிய இழப்பீடு: அமைச்சா் ராமச்சந்திரன் தகவல்
மழையால் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில், மழை நிலவரத்தை அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்துக்கு 2 பேரிடா் மீட்பு படைகள் விரைந்துள்ளன. பொதுமக்களை தங்க வைப்பதற்கு நிவாரண முகாம்கள் அமைத்து, உணவு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். பயிா் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை அரசு வழங்கும் என்று தெரிவித்தாா்.