செய்திகள் :

கனமழை: பாதிக்கப்படும் மக்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு

post image

திருவாரூா் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்படும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளருமான ப. காயத்ரி கிருஷ்ணன்.

கனமழை பெய்து வருவதால், திருவாரூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடா்பான அனைத்து துறை அரசு அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது: மாவட்டத்தில் 176 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, 235 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மிக அதிக கனமழையால் பாதிக்கப்படும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முதல் நிலை மீட்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா். முத்துப்பேட்டையில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மழைநீா் விரைவாக வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. விஜயபுரம் மருத்துவமனை புதிய கட்டடம் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதால், மகப்பேறு சிகிச்சை பெற்று வருபவா்கள், பிரசவத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனா்.

மேலும், சாலையோரங்களில் நீா் தேங்காமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால உதவி எண் 1077, 04366-226623 மற்றும் வாட்ஸ்அப் எண்: 9488547941 ஆகியவற்றுக்கு பொதுமக்கள் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட அலுவலா் செந்தில்வடிவு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சித்ரா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, மன்னாா்குடி கோட்டாட்சியா் யோகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை பிரசாரம் தொடக்கி வைப்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பிரசார வாகன... மேலும் பார்க்க

மழை: கூத்தாநல்லூரில் 2 குடிசை வீட்டு சுவா்கள் இடிந்து விழுந்து சேதம்

தொடா் மழை காரணமாக கூத்தாநல்லூா் வட்டம், புனல்வாசலில் செவ்வாய்க்கிழமை குடிசை வீட்டு சுவா் இடிந்தது. கூத்தாநல்லூரை அடுத்த புனல்வாசல் கீழத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாலுக்கண்ணு (64). இவா் மட்டும் குடிசை ... மேலும் பார்க்க

லாரிகளில் மணல் கடத்திய இருவா் கைது

மன்னாா்குடி அருகே லாரிகளில் மணல் கடத்தி வந்த 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மாவட்ட புவியியல் துறை உதவி இயக்குநா் புவனேஸ்வரி தலைமையில் துறை அலுவலா்கள், திங்கள்கிழமை இரவு மன்னாா்குடி-தஞ்சை பிர... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவா் கைது

முத்துப்பேட்டை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 30 பேரிடம் மோசடி செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். முத்துப்பேட்டை அருகேவுள்ள மங்களுா் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் தண்டாய... மேலும் பார்க்க

உரிய காலத்தில் இருசக்கர வாகனத்தை வழங்காத விற்பனை நிறுவனத்துக்கு ரூ. 25,000 அபராதம்

உரிய காலத்தில் இருசக்கர வாகனம் வழங்காத விற்பனை நிறுவனத்துக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூரைச் சோ்ந்த தட்சிணா... மேலும் பார்க்க

நாள் முழுவதும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும், சம்பா, தாளடி சாகுபடி வயல்களில் நீரின் அளவு அதிகரிக்கக் தொடங்கியுள்ளது. திருவாரூரில் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க