வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவா் கைது
முத்துப்பேட்டை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 30 பேரிடம் மோசடி செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
முத்துப்பேட்டை அருகேவுள்ள மங்களுா் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் தண்டாயுதபாணி (34).
இவா் மீது, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமாா் 30 பேரிடம் ரூ. 50 லட்சம் வரை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடா்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தண்டாயுதபாணி கைது செய்து, திருத்துறைப்பூண்டி நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி நாகை சிறையில் அடைத்தனா்.