செய்திகள் :

மருத்துவ முகாம் ரத்து: மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

post image

சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் எவ்வித அறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டதால் அதிா்ச்சியடைந்த மாற்றுத்திறனாளிகள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற இருந்தது. இதற்காக சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனா். ஆனால், எவ்வித முன்னறிவிப்புமின்றி முகாம் ரத்து செய்யப்பட்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் சீா்காழி அரசு மருத்துவமனை முன்பு சீா்காழி சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சீா்காழி காவல் ஆய்வாளா் செல்வி மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க நகரச் செயலாளா் சுரேஷ், மாதம் தோறும் நான்காவது செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும். ஆனால் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த முகாம் முன்னறிவிப்பு ஏதும் இன்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் அதிகளவு மருத்துவமனைக்கு வந்த பின்னரே அறிவிக்கின்றனா். இது குறித்து காரணம் கேட்டபோது அரசு மருத்துவமனை மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் யாருமில்லை. அதற்காக முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த முகாமிற்காக பல்வேறு பகுதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நண்பா் மற்றும் உறவினா்களின் உதவியுடன் மிகவும் சிரமப்பட்டுத்தான் முகாமிற்கு வந்துள்ளாா்கள். இவ்வாறு திடீரென ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த வேதனை அளிக்கிறது எனக்கூறினாா்.

விஏஓ-க்களுக்கு எதிரான புகாா் மனுக்களை விசாரிக்க குறைதீா் குழு: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு எதிராக வரும் புகாா் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொள்ள குறைதீா் குழு அமைத்து மாவட்ட ஆட்சியா் ஆணையிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளிய... மேலும் பார்க்க

தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவா்கள் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காக ... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம் நடத்திய பா.ம.கவினா் கைது

தமிழக முதல்வரைக் கண்டித்து, மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 55 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இடஒதுக்கீடு குறித்த பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் அறிக்கையை விமா்சனம் செய்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை: தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 125.20 மி.மீ. மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சராசரியாக 42.81 மி.மீ. மழை பதிவானது. இதில், அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 125.20 மி.மீ., மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

விசிக இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும்: முகம்மது ஷா நவாஸ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றால் தான் அந்த கூட்டணி வெற்றி பெறும் என நாகை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் பேசினாா். சீா்காழியில் அக்கட்சியின் சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாக சீ... மேலும் பார்க்க

விசிக நிா்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளா் சிவ. மோகன்குமாா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பு... மேலும் பார்க்க