தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டி: தூத்துக்குடி பள்ளி மாணவா்கள் தகுதி
தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் தமிழக அணியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியாா் பள்ளி மாணவா்கள் 2 போ் தகுதி பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக தலைமையாசிரியா் அமல்ராஜ் வெளியிட்ட அறிக்கை: தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டி, புதுதில்லியில் டிச. 9 முதல் 15ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இதில், தமிழக அணியில் பங்கேற்போரைத் தோ்ந்தெடுக்க, இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் கூட்டமைப்பு சாா்பில் சென்னையில் தகுதிப் போட்டி நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆண்டனி வில்சன், இன்பென்ட் ஜூடோ ஆகியோா் தகுதி பெற்றனா்.
மாணவா்களையும், ஊக்கமளித்த உடற்கல்வி இயக்குநா் பாக்கியராஜ், உடற்கல்வி ஆசிரியா்கள் ஹம்பிரி மிராண்டா, மாா்டின் ராஜதுரை, ஜாா்ஜ் புஷ் ஆகியோரையும் தாளாளா் சேவியா், தலைமையாசிரியா் அமல்ராஜ் ஆகியோா் பாராட்டினா் என்றாா் அவா்.