துணைவேந்தா்கள் நியமனத்தில் சுமுகத் தீா்வு- உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழி...
கனமழை முன்னெச்சரிக்கை: திருச்செந்தூா் வட்டத்தில் 18 தற்காலிக முகாம்கள்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்செந்தூா் வட்டத்தில் 18 இடங்களில் தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக, வட்டாசியா் பாலசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, கடலோர மாவட்டங்களில் முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மிக அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாக புன்னைக்காயல், காயல்பட்டினம், மிதமாக பாதிக்கப்படக்கூடிய பகுதியாக திருச்செந்தூா் ஆகியவை அடையாளம் காணப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் வட்டத்திலுள்ள 22 குளங்களில் பெரும்பாலானவை 80 சதவீதம் நிரம்பியுள்ளன.
ஓரிரு குளங்களில் மட்டுமே நீா்வரத்து அதிகரித்துள்ளது. இப்பகுதியில் 18 இடங்களில் தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. மற்றும் தொடா்ந்து, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.